அரிசி விஞ்ஞானி டாக்டர் சித்திக் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 1,03,000 கல்வி உதவித்தொகை:
இளையான்குடியில் பிறந்து தற்போது ஹைதராபாத்தில் வசித்துவரும் பத்மஸ்ரீ டாக்டர் இ.ஏ. சித்திக் அவர்கள் தான் பிறந்த ஊரை மறக்காமல் நமதூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகின்றார்.
Click
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுரியில் கல்வி கற்று வரும் ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் சித்திக் அவர்கள் உதவி வருகின்றார். இந்த வருடம் ரூபாய் 1,03,000 ஐ (ரூபாய் ஒரு லட்சத்து மூன்று ஆயிரம்) உதவித்தொகையாக தஙகளது டிரஸ்டிலிருந்து வழங்கியுள்ளார். இந்தத் தொகை 18 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகயாக வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இளையான்குடி கிளையின் மானேஜர் (டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்)திரு ஆறுமுகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கல்லூரிக்கு வருகை தந்து கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் டாக்டர் செய்யது உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணைமுதல்வர் டாக்டர் சபினுல்லாக்கான் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தினார். பிறந்த ஊரை மறக்காமல் ஏழை, எளிய மக்கள் முன்னேற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் உதவி செய்து வரும் பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்களை ஆசிரியர்களும், மாணவர், மாணவிகளும், ஊர் பொதுமக்களும் மிகவும் பாராட்டினர். அவருக்கும் அவர் குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா வளங்களையும் வழங்க வேண்டுமென துஆச் செயதனர். உதவித் தொகை பெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் செய்யது உசேன் செய்திருந்தார்.
THANKS to : Dr.Syed Hussain syedzhcily@yahoo.com
No comments:
Post a Comment