Showing posts with label Editorial. Show all posts
Showing posts with label Editorial. Show all posts

Wednesday, January 13, 2010

அனுப்புவது கடிதம் அல்ல!!! உண்மை !!!

பெரு மதிப்பிற்க்கும், மரியாதைக்கும் உரிய (CLICK--> தென்மலைக் "கான்" காதர் சாஹிப் ஹமீது சுல்த்தான் ) மர்ஹூம் ஹாஜி தென்மலைக்கான் T.K.ஹமீது சுல்த்தான் ( ஸ்தாபகர் இளை.பெண்கள் உயர் நிலைப்பள்ளி. டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் "இஸ்லாமிய கலைக்கூடம்" கட்டிட நன் கொடையாளர்) அவர்கள்,

தன் தமைய‌னார் மகன் என்று உரிமையுடன் சொந்தம் பாராட்டும், மர்ஹூம் ஹாஜி வாஞ்சூர் V.M.பீர் முஹமது (FOUNDER CORRESPONDENT OF DR.ZAKIR HUSAIN COLLEGE,டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் நிறுவன செயலாளர். முதன் முதல் கட்டிட நன்கொடையாளர், நிலதானம் செய்தவர், )அவர்களுக்கு, எழுதிய இக்கடிதம் கீழே:
click to enlarge



படிப்பதற்க்கு ஏதுவாக கடிதத்தில் உள்ள விபரத்தை , தனியாக அச்சில் வடித்துள்ளோம்.


மட்றாஸ் 13 . 3 .71.

அன்புள்ள தமையனார் மகன் V.M.பீர் முஹமது அவர்களுக்கு T.K ஹமீது சுல்த்தானுடைய துஆ சலாம்.


அப்துல் றஹீமுக்கு தாங்கள் அனுப்பிய கடிதத்தை நேரில் கொடுத்து விசயங்களும் விள‌க்கியதில் சம்மதம் கல்கத்தா போயி எழுதுவதாக சொன்னார். எழுதுவார் விசயம் முடிந்த மாதிரித்தான்.


இவ்விடமுள்ள நம்மூர்வாசிகள் எல்லோருக்கும் தாங்கள் தனி முறையில் காரியங்களை சாதிப்பதுதான் பிரியமாக இருக்கிறது. எனவே சகல விசயங்களையும் தாங்கள் தனி முறையிலேயே கவனித்துக்கொள்ளவும்


அத்துடனே நமது ஸ்கூல் விசயத்தையும் தூண்டி எழுதி வாங்கி, ஆவன செய்வீர்களென மிகவும் எதிர் பார்க்கிறேன்.


பொது விசயங்களில் ஈடுபட்டு யாருமே நல்ல பேர் எல்லோரிடமும் எடுக்க முடியாது அதனால் மனசுக்குள்ளே சலனம் அடையவும் கூடாது


அல்லாவுக்கருகில் இருப்பவர்கள் அல்லாவிடம்தான் கிருபையை எதிர் பார்க்கனும். மனிதர் கிருபை நமக்கு தேழ்வையில்லை.


அல்லா எல்லா நற்காரியங்களுக்கும்கிருபை செய்வான். வேனும் நாயன் துனை.

*********
இப்படி, இரண்டு பெருமகனாருக்கு இடையே உள்ள இக்கடிதத்தை இப்பொழுது வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

இளையான்குடியின் இரண்டு பெரிய செல்வந்தர்களில் ஒருவர், வயதில் மூத்தவராக இருந்து, தன் தமையனார் மகன் என்று அன்போடு அழைத்து, பண்போடு எழுதி, எவ்வளவு அருமையாக ஊரின் பொது விசயங்களில் ஈடுபடுதலின் ,நன்மை, தீமைகளை விளக்கியிருக்கிறார்..

இதையேதான் நாங்களும் இந்த இணையதளம் மூலமாக, ஊர் பொது விசயங்களில் நடக்கும் நல்லவை, கெட்டவைகளை "வெளிச்சம்" போட்டுக்காட்டுகிறோம்..எங்களுக்கு நல்ல பெயர் எங்கு கிடைக்குமோ அங்கு(அல்லாவிடத்தில்) கிடைக்கட்டும். மனிதருடைய கிருபை தேவையில்லை....மனிதருடைய ஏச்சுக்கும், பேச்சுக்கும் பணியப்போவதில்லை....

நிர்வாகம்

Saturday, December 12, 2009

உறவுகள் மேம்பட:


குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:

நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விடுங்கள்.

எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசூக்காக கையாளுங்கள் விட்டுக்கொடுங்கள்.

சிலநேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்று உணருங்கள்.

நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள் குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.

அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.

மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத்தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
WebTeam

Saturday, December 5, 2009

நிர்வாக தலைமையில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை.

தலைமையில் இருப்பவர் கடமை தவறினால் என்னாவாவார்கள்?

இன்று நம் இளையான்குடியில் இஸ்லாமிய சமூகத்தினரால் நிர்வகிக்கப்படும்

கல்வி
ஸ்தாபனங்கள் , மருத்துவ மணை , பொது தொண்டு தர்ம ஸ்தாபனங்கள் , பள்ளிவாயில்கள், பொது
சொத்துக்கள் நிர்வாகம் ஆகியவைகளுக்கு

தலைமையில் இருப்பவர்களுக்கு

இது நல்லதொரு
எச்சரிக்கையாகும்.

இதை படித்தாவது திருந்துங்கள்.திருத்துங்கள்.

க்ளிக் செய்து படியுங்கள்.

நிர்வாகம்

Home

Monday, July 13, 2009

கல்வித்துறை செய்திகள்

Click on this link
போலியான சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்:களையெடுக்குமா அரசு?