Saturday, November 5, 2011

இளையான்குடி தாவா சென்டர் ;"வான்வெளி முதல் மண்ணறை வரை"

இளையான்குடி தாவா சென்டர் மற்றும் காயல்பட்டிணம் தாவா சென்டர் இணைந்து வழங்கிய "வான்வெளி முதல் மண்ணறை வரை"  என்ற நிகழ்ச்சி 28.10.2011 அன்று கீழாயூரிலும்  29.10.2011  அன்று இளையான்குடி தாஸ்கண்ட் தெருவில் உள்ள நூருல் ஹுதா மதரஸாவிலும் நடைபெற்றது. இதில் காயல்பட்டிணம் தாவா சென்டரில் இருந்து வந்த சகோதரர் ஜகரியா சிறப்பு  பயான் செய்தார். இதில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.நிகழ்ச்சியில் பெரும்பாலான மக்கள் பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். 28,29,30 ஆகிய நாட்களில்  இளையான்குடி  மற்றும் காயல்பட்டிணம் தாவா சென்டர் தாயீக்கள் இளையான்குடியை சுற்றியுள்ள கிராமத்திற்கு குழுவாக சென்று அழைப்பு பணி செய்தனர். இறுதி நாள் அழைப்பு பணியில் அல்லாஹ்வின் கிருபையால் கபரியேல் பட்டிணம் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்நெறியாக அமைத்து கொண்டார். மாஷா அல்லாஹ்...மேலும் இப்பணி சிறக்க வல்ல அல்லாஹ்வை வேண்டி து ஆ செய்யுங்கள்......


Click

Thanks to Trsi Kader  trsikader@gmail.com

No comments: