Tuesday, February 21, 2012

இளை."சிட்டிஷன்" வேண்டுகோள்;

Click to Read


From: hamid hamid <hamid_md2007@yahoo.com

Saturday, January 21, 2012

தலைமைத் தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ரா வேண்டுகோள்

Click to Read

Sunday, January 8, 2012

I N P T பள்ளிவாசலின் சட்ட திட்டங்கள் (ஸ்கீம்) 1964 முதல்;

Click to Read





Wednesday, December 28, 2011

புகாரின் பேரில் நடவடிக்கை;கல்வித்துறை எச்சரிக்கை:

Click

Saturday, December 17, 2011

பஸ் விபத்து

Friday, December 16, 2011

சோதுகுடி- H. நூர் முஹமது, வாடிக்கையாளர்களின் திருப்தியால் உயர்ந்தவர்

Click


Source:Dinamani

Saturday, November 5, 2011

இளையான்குடி தாவா சென்டர் ;"வான்வெளி முதல் மண்ணறை வரை"

இளையான்குடி தாவா சென்டர் மற்றும் காயல்பட்டிணம் தாவா சென்டர் இணைந்து வழங்கிய "வான்வெளி முதல் மண்ணறை வரை"  என்ற நிகழ்ச்சி 28.10.2011 அன்று கீழாயூரிலும்  29.10.2011  அன்று இளையான்குடி தாஸ்கண்ட் தெருவில் உள்ள நூருல் ஹுதா மதரஸாவிலும் நடைபெற்றது. இதில் காயல்பட்டிணம் தாவா சென்டரில் இருந்து வந்த சகோதரர் ஜகரியா சிறப்பு  பயான் செய்தார். இதில் பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டிருந்தது.நிகழ்ச்சியில் பெரும்பாலான மக்கள் பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். 28,29,30 ஆகிய நாட்களில்  இளையான்குடி  மற்றும் காயல்பட்டிணம் தாவா சென்டர் தாயீக்கள் இளையான்குடியை சுற்றியுள்ள கிராமத்திற்கு குழுவாக சென்று அழைப்பு பணி செய்தனர். இறுதி நாள் அழைப்பு பணியில் அல்லாஹ்வின் கிருபையால் கபரியேல் பட்டிணம் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்நெறியாக அமைத்து கொண்டார். மாஷா அல்லாஹ்...மேலும் இப்பணி சிறக்க வல்ல அல்லாஹ்வை வேண்டி து ஆ செய்யுங்கள்......


Click

Thanks to Trsi Kader  trsikader@gmail.com

Tuesday, November 1, 2011

டாக்டர் E.A. சித்திக் அவர்களின் கல்வி உதவித்தொகை:

அரிசி விஞ்ஞானி டாக்டர் சித்திக் அவர்கள் கல்லூரி  மாணவர்களுக்கு ரூபாய் 1,03,000 கல்வி உதவித்தொகை:
இளையான்குடியில் பிறந்து தற்போது ஹைதராபாத்தில் வசித்துவரும் பத்மஸ்ரீ டாக்டர் இ.ஏ. சித்திக் அவர்கள் தான் பிறந்த ஊரை மறக்காமல் நமதூரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரியில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை வழங்கி வருகின்றார்.
Click
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லுரியில் கல்வி கற்று வரும் ஏழை, எளிய மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடர ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் சித்திக் அவர்கள் உதவி வருகின்றார். இந்த வருடம் ரூபாய் 1,03,000 ஐ (ரூபாய் ஒரு லட்சத்து மூன்று ஆயிரம்) உதவித்தொகையாக தஙகளது டிரஸ்டிலிருந்து வழங்கியுள்ளார். இந்தத் தொகை 18 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகயாக வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகை வழங்கும் விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இளையான்குடி கிளையின் மானேஜர் (டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்)திரு ஆறுமுகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கல்லூரிக்கு வருகை தந்து கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் டாக்டர் செய்யது உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரியின் துணைமுதல்வர் டாக்டர் சபினுல்லாக்கான் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தினார். பிறந்த ஊரை மறக்காமல் ஏழை, எளிய மக்கள் முன்னேற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் உதவி செய்து வரும் பத்மஸ்ரீ டாக்டர் சித்திக் அவர்களை ஆசிரியர்களும், மாணவர், மாணவிகளும், ஊர் பொதுமக்களும் மிகவும் பாராட்டினர். அவருக்கும் அவர் குடும்பத்தார்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் எல்லா வளங்களையும் வழங்க வேண்டுமென துஆச் செயதனர். உதவித் தொகை பெறுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் செய்யது உசேன் செய்திருந்தார்.
  THANKS to : Dr.Syed Hussain     syedzhcily@yahoo.com

Friday, October 21, 2011

வாழ்த்துக்கள்

 இளையான்குடி உள்ளாட்சி தேர்தலில், பஞ்சாயத்து தலைவராக சுயேச்சை வேட்பாளர் ஜனாப் ஆசாலெவை அயூப் அலிகான் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.திமுக வேட்பாளர் ஜனாப் ஆசைத்தம்பியைவிட 129 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி. 

பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில், 13 வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு விபரங்கள்: 


ப‌திவான‌ ஓட்டுக்க‌ள்--------11,294
த‌பால் ஓட்டுக்கள்------------------ 58
 Janab .    அயூப் அலிகான் ----                   2,654 ஓட்டுக்கள்
Janab ஆசைத்தம்பி ----             2,525      "
Janab அன்வர் ----                         2,112      "
Janab அல் அமீன் ----                  1,630       "

" மெளலா நாசர் ----                 1,059

" T.R.S. காதர்   -----                   332
டார்ச் லைட்       ----                    289
"ராவுத்தர் அம்பலம்--                  184
தே.மு.தி.க           ----                  176
மின் விசிறி         -----                  161
ம‌.தி.மு.க.            ----                  123
 கணிணி              ----                    57
"ஷாநவாஸ்             ---                  50

Click
  தகவல்: K.M.அக்பர் அலி அவர்கள்.
XXXXXX

உங்கள் ஊர் (தமிழக )உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பார்க்க 

.http://117.239.70.112/nomination/lb_vill_vote_result.php

Sunday, October 2, 2011

கண்சிகிச்சை முகாம்

இளையான்குடியில் கண்சிகிச்சை முகாம்

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் வணிகவியல் துறை, நாட்டுநலப்பணித்திட்ட அமைப்புக்கள், இளையான்குடி சிட்டி லயன்ஸ் கிளப், டைம் டிரஸ்ட், செம்பிறை மருத்துவமனை முதலியன இணைந்து இளையான்குடி செம்பிறை மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். இம்முகாமிற்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் வருகைதந்து கண்நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தனர். இந்த முகாமிற்கு ஹாஜி T.S.H. முசாபர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.  ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்டக் குழுவின் தலைவர் ஜனாப் V.A.S.முகம்மதலி, இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் செயலர் ஹாஜி O.M. காதர் பாட்ஷா, இளையான்குடி சிட்டி லயன்ஸ் கிளப்பின் செயலர் ஜனாப் M. சீனி முகம்மது முதலியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 249 நபர்கள் பங்குபெற்று தங்களின் கண்களைப் பரிசோதித்து பயனடைந்தனர். 37 கண்புரை நோய் உள்ளவர்கள் ஆபரேசனுக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறையின் தலைவர் டாக்டர் M.M.E. செய்யது உசேன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஹாஜி M. முகம்மது இபுறாஹிம் முதலியோர் செய்திருந்தனர்.

Click
 THANKS to : Dr.Syed Hussain     syedzhcily@yahoo.com