இளையான்குடியில் கண்சிகிச்சை முகாம்
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியின் வணிகவியல் துறை, நாட்டுநலப்பணித்திட்ட அமைப்புக்கள், இளையான்குடி சிட்டி லயன்ஸ் கிளப், டைம் டிரஸ்ட், செம்பிறை மருத்துவமனை முதலியன இணைந்து இளையான்குடி செம்பிறை மருத்துவமனையில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். இம்முகாமிற்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் வருகைதந்து கண்நோயாளிகளுக்குச் சிகிச்சையளித்தனர். இந்த முகாமிற்கு ஹாஜி T.S.H. முசாபர் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்டக் குழுவின் தலைவர் ஜனாப் V.A.S.முகம்மதலி, இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் செயலர் ஹாஜி O.M. காதர் பாட்ஷா, இளையான்குடி சிட்டி லயன்ஸ் கிளப்பின் செயலர் ஜனாப் M. சீனி முகம்மது முதலியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் 249 நபர்கள் பங்குபெற்று தங்களின் கண்களைப் பரிசோதித்து பயனடைந்தனர். 37 கண்புரை நோய் உள்ளவர்கள் ஆபரேசனுக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை வணிகவியல் துறையின் தலைவர் டாக்டர் M.M.E. செய்யது உசேன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஹாஜி M. முகம்மது இபுறாஹிம் முதலியோர் செய்திருந்தனர்.
Click
THANKS to : Dr.Syed Hussain syedzhcily@yahoo.com
No comments:
Post a Comment