Thursday, August 4, 2011

டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் துறையில் கருத்தரங்கு

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல் துறையில் இளைஞர் நலன் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பரமக்குடி குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கே.ஆர். பார்த்தசாரதி அவர்கள் கலந்துகொண்டு இளைஞர் நலன் பற்றி பேசினார். இளைஞர்கள் தங்களின் உடல்நலத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் மனநலத்தை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் செய்யது உசேன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் துணைமுதல்வர் டாக்டர் சபினுல்லாக்கான் நன்றியுரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் முகம்மது ஜலில். அப்பாஸ் மந்திரி மற்றும் முகம்மது சரீப் முதலியோர் செய்திருந்தனர்.
Click to Enlarge



  THANKS to : Dr.Syed Hussain     syedzhcily@yahoo.com

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

காலத்துக்கு ஏற்ற கருத்தரங்கு.