Friday, January 22, 2010

எட்டாம் வெளிச்சம்-திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்

திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்.

இளையான்குடியைப் பொருத்தவரை மேலப்பள்ளி ஜமாத்,நெசவுப்பட்டடை ஜமாத், சாலை, புதூர் ஜமாத் ஆகிய‌ ஜமாத்துக்களுக்கு சமமாக "செட்டியார்" சமூகமும், ஒன்றுக்குள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்த நேரம் அது.

இப்பொழுது நிறைய செட்டியார் சமூகத்தைச்சார்ந்தவர்கள் வியாபார நிமித்தமாய், உறவின் காரணமாயும் ஊரை விட்டு மதுரை, கோயம்புத்தூர் என்று பல ஊர்களுக்கு குடி பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.
ஊரில் முக்கிய நிகழ்வுகளுக்காகவும், கோவில் விஷேசங்களுக்கும், உறவினர்கள் விஷேசத்திற்க்கும் வந்து, போய், இளையான்குடியுடன் கலந்து, ஒற்றுமை மாறாமல் வாழ்ந்து வருகிறோம் என்பது மிக சந்தோசமான செய்தி அல்லவா?

இளையான்குடியில் பெரும்பாலும் செட்டியார் சமூகம் 'ஆயிர வைசிய' பிரிவைச்சார்ந்தவர்கள் என்று சரித்திரம் எடுத்துரைக்கிறது.

இப்படி செட்டியார் சமூகத்தில் ஊருக்கென்று பொது ஸ்தாபனங்களுக்கு தானமாக இடம், பொருள், உழைப்பு என்று வழங்கியோர் பலருண்டு. இதில் எள்ளளவும் மாற்று கருத்து கிடையாது. இளை.வெளிச்சத்தில் முன்பே பதிப்பான‌ 'இரண்டாம் வெளிச்சத்தில்' ஆரம்ப பள்ளி ஆரம்பித்த திரு.அண்ணாமலை செட்டியார் அவர்களைப் பார்த்தோம்.

இந்த செட்டியார் சமூகத்தில் இளையான்குடியில் பிறந்து, ஊருக்காக பல வகைகளில் உழைத்தவரும், நல்ல பண்பாளரும், அமைதியும், அடக்கமும் உடையவரும் எல்லோருடனும் பழகுவதற்க்கு எளிமையானவருமான "திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார்" அவர்களை இங்கு "வெளிச்சம்" ஆக வெளியிடுவதில் திருப்தியடைகிறோம்.

இவரைப்பற்றி சொல்லும்போது, முதன்மையாக சொல்ல வேண்டுமெனில் இவர் சிறந்த பக்திமான்.. கடவுள் மீது அதிக பற்றுள்ளவர், இதற்கு எடுத்துக்காட்டாக, இளையான்குடியின் புரதான சின்னமாக விள‌ங்கும் பெருமாள் கோவிலின் ராஜ கோபுரத்தை 1942ல் கட்டி, கோவிலுக்கு சிறப்புச்செய்தார்.

இளையான்குடியில் முதன் முதலாக 1960ல் காஃபித்தூள் அரைக்கும் மிஷினை நிறுவி, "விக்டர் காஃபி ஒர்க்ஸ்" என்ற நிறுவனத்தை நிறுவினார். இதனால் சுற்று வட்டாரம் யாவும் 'ஃப்ரஷ்ஷாக' காஃபித்தூள் கிடைத்து, மக்கள் "பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு" என்று குதூகலிக்க வைத்தவர்.

இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத்தில் 3, 4, 5வது கமிட்டியில் உறுப்பினராக இருந்து, நல்ல ஆரோக்கியமான கருத்துக்களை வழங்கியுள்ளார்..

இளையான்குடி கல்லூரிக்கழகம் 1968ல் ஆரம்பிக்கும்பொழுது, செயற்குழு கமிட்டியில் மெம்பராக இருந்து "கல்லூரிக்காக 50 ஏக்கர் நிலம் தேவை என்றும், இதைபெற மக்களிடம் யூனிட் முறையில் பணம் பெறுவது என்றும், ஒரு யூனிட்டின் விலை ரூபாய் 300/= என்றும் " ஒரு அரிய திட்டத்தைக்கொண்டு வந்தவர் இவரே.. இவரும் தன் பங்காக 2 யூனிட்(ரூ 600/=) வாங்க நிதி அளித்துள்ளார்கள்..

இவர்கள் வாழும் வரை ஊருக்காக பல தான தர்மங்கள் வழங்கியதற்கான ஆதாரமாக கீழே இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கமும், இளையான்குடி கல்லூரிக்கழகமும், இவருடைய ஷஷ்டியப்த பூர்த்தியின் போது வெளியாக்கிய பாராட்டு மடல்.
இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கம்‍ - பாராட்டு மடல்.

CLICK TO ENLARGE


இளையான்குடி கல்லூரிக்கழகம் - பாராட்டு மடல்



இவருடைய குடும்பம் பற்றி:


இவர்களுடைய துனைவியார் திருமதி மீனாம்பாள் அம்மையார் அவர்கள்

இத்தம்பதியினருக்கு 2 ஆண் மக்கள், 3 பெண் பிள்ளைகள், ஆண் மக்களில் மூத்தவர் திரு சந்திரன், இளையவர் திரு நடராஜன்.

பெண் மக்கள் திருமதி புஷ்பம், திருமதி சரோஜா , திருமதி தேவி ஆகியோர் ஆவார்கள்..
CLICK ON THE PHOTO TO ENLARGE.

திரு கு.ச.பிச்சை மாணிக்கம் செட்டியார் அவர்கள்.
"வாழ்ந்தால் உங்களைப்போல் நல் மனிதராக‌ வாழ வேண்டும்"

தகவல்கள் வழங்கியது திரு S.P சந்திரன
********

நிர்வாகம்
Home

1 comment:

Unknown said...

Dear Grandpa!
Ungal pugazhal velicham ulzham mulzhuvathum parravattum.
With love
Sivakumar,Sathiya,Jeyapradha.
Mumbai.
HP:9833546234