Wednesday, January 13, 2010

அனுப்புவது கடிதம் அல்ல!!! உண்மை !!!

பெரு மதிப்பிற்க்கும், மரியாதைக்கும் உரிய (CLICK--> தென்மலைக் "கான்" காதர் சாஹிப் ஹமீது சுல்த்தான் ) மர்ஹூம் ஹாஜி தென்மலைக்கான் T.K.ஹமீது சுல்த்தான் ( ஸ்தாபகர் இளை.பெண்கள் உயர் நிலைப்பள்ளி. டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் "இஸ்லாமிய கலைக்கூடம்" கட்டிட நன் கொடையாளர்) அவர்கள்,

தன் தமைய‌னார் மகன் என்று உரிமையுடன் சொந்தம் பாராட்டும், மர்ஹூம் ஹாஜி வாஞ்சூர் V.M.பீர் முஹமது (FOUNDER CORRESPONDENT OF DR.ZAKIR HUSAIN COLLEGE,டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் நிறுவன செயலாளர். முதன் முதல் கட்டிட நன்கொடையாளர், நிலதானம் செய்தவர், )அவர்களுக்கு, எழுதிய இக்கடிதம் கீழே:
click to enlarge



படிப்பதற்க்கு ஏதுவாக கடிதத்தில் உள்ள விபரத்தை , தனியாக அச்சில் வடித்துள்ளோம்.


மட்றாஸ் 13 . 3 .71.

அன்புள்ள தமையனார் மகன் V.M.பீர் முஹமது அவர்களுக்கு T.K ஹமீது சுல்த்தானுடைய துஆ சலாம்.


அப்துல் றஹீமுக்கு தாங்கள் அனுப்பிய கடிதத்தை நேரில் கொடுத்து விசயங்களும் விள‌க்கியதில் சம்மதம் கல்கத்தா போயி எழுதுவதாக சொன்னார். எழுதுவார் விசயம் முடிந்த மாதிரித்தான்.


இவ்விடமுள்ள நம்மூர்வாசிகள் எல்லோருக்கும் தாங்கள் தனி முறையில் காரியங்களை சாதிப்பதுதான் பிரியமாக இருக்கிறது. எனவே சகல விசயங்களையும் தாங்கள் தனி முறையிலேயே கவனித்துக்கொள்ளவும்


அத்துடனே நமது ஸ்கூல் விசயத்தையும் தூண்டி எழுதி வாங்கி, ஆவன செய்வீர்களென மிகவும் எதிர் பார்க்கிறேன்.


பொது விசயங்களில் ஈடுபட்டு யாருமே நல்ல பேர் எல்லோரிடமும் எடுக்க முடியாது அதனால் மனசுக்குள்ளே சலனம் அடையவும் கூடாது


அல்லாவுக்கருகில் இருப்பவர்கள் அல்லாவிடம்தான் கிருபையை எதிர் பார்க்கனும். மனிதர் கிருபை நமக்கு தேழ்வையில்லை.


அல்லா எல்லா நற்காரியங்களுக்கும்கிருபை செய்வான். வேனும் நாயன் துனை.

*********
இப்படி, இரண்டு பெருமகனாருக்கு இடையே உள்ள இக்கடிதத்தை இப்பொழுது வெளியிட வேண்டிய அவசியம் என்ன?

இளையான்குடியின் இரண்டு பெரிய செல்வந்தர்களில் ஒருவர், வயதில் மூத்தவராக இருந்து, தன் தமையனார் மகன் என்று அன்போடு அழைத்து, பண்போடு எழுதி, எவ்வளவு அருமையாக ஊரின் பொது விசயங்களில் ஈடுபடுதலின் ,நன்மை, தீமைகளை விளக்கியிருக்கிறார்..

இதையேதான் நாங்களும் இந்த இணையதளம் மூலமாக, ஊர் பொது விசயங்களில் நடக்கும் நல்லவை, கெட்டவைகளை "வெளிச்சம்" போட்டுக்காட்டுகிறோம்..எங்களுக்கு நல்ல பெயர் எங்கு கிடைக்குமோ அங்கு(அல்லாவிடத்தில்) கிடைக்கட்டும். மனிதருடைய கிருபை தேவையில்லை....மனிதருடைய ஏச்சுக்கும், பேச்சுக்கும் பணியப்போவதில்லை....

நிர்வாகம்

No comments: