Tuesday, February 23, 2010

ஒரு வார்த்தை மாற்ற... அன்று !!! இன்றோ ???

1960களில் பொது ஸ்தாபனங்களில் நிர்வாகத்தில் இருப்பவர்கள் எவ்வளவு கண்ணும் கருத்துமாயும், கடமையுடனும், கட்டுப்பாடுடனும் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதற்க்கு இதைவிட ஓர் அரிய சான்று வேண்டுமோ???

இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத்தில், சங்க பகுதி விதியில் ஒரு வார்த்தையை , கம்பெனி சட்டப்படி திருத்துவதற்க்கு எவ்வளவு அக்கறை எடுத்து இ.மு.க.சங்கத்தின் உறுப்பினர்கள் யாவருக்கும்(உறுப்பினர்கள் இந்தியாவில் இருப்பவருக்கு மட்டுமல்ல, வெளி நாட்டில் உள்ளோர்க்கும்) தகவல் கடிதம் (Certificate of Posting) செய்து AIR MAIL தபாலில் BOOK-POST 25 np Stamp ஒட்டி) அனுப்பி நிர்வாகக்குழு தலைமை தெரியப்படுத்தி முறைப்படி மாற்றி இருந்திருக்கிறார்கள். .

இவ்வளவுக்கும் ஒரு வார்த்தை மட்டுமே சங்க பகுதி விதியில் மாற்றுவதற்க்கு,
என்ன வார்த்தை அது?

ஆங்கிலத்தில்
" Shall "என்றிருப்பதை "  may " என்றும்
தமிழில்
"இருப்பார்" என்றிருப்பதை "இருக்கலாம்" என்று மாற்றத்தான்.

அன்றைய இளை.பெரியோர்களுக்கு என்ன ஒரு சங்க பகுதி விதிகளுக்கு கொடுக்கும் மரியாதையை உணர முடிகிறது..

ஆனால் இன்றோ.. அய்யகோ!
என்னவென்று சொல்வதப்பா?
'BYE-LAW' க்கள் படும்பாடு???

CLICK TO ENLARGE.

No comments: