இளையான்குடியின் வரலாறு பற்றி எல்லா வகையிலும் நாம் அறிந்திருப்போம்,
ஆனால் பக்கத்து ஊரான "புதூரைப்பற்றி"ய இஸ்லாமியர்களின் வரலாறு நாம் அறிந்தும் அறியாமலும்தான்..
இதோ உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்....
Click on this page to Read
ஆனால் பக்கத்து ஊரான "புதூரைப்பற்றி"ய இஸ்லாமியர்களின் வரலாறு நாம் அறிந்தும் அறியாமலும்தான்..
இதோ உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறோம்....
Click on this page to Read
முதல் பக்கம்
2 , 3 ம் பக்கம்
4 , 5 ம் பக்கம்
6 , 7 ம் பக்கம்
8 , 9 ம் பக்கம்
10,11 ம் பக்கம்
12,13 ம் பக்கம்
கடைசி பக்கம்
2 , 3 ம் பக்கம்
4 , 5 ம் பக்கம்
6 , 7 ம் பக்கம்
8 , 9 ம் பக்கம்
10,11 ம் பக்கம்
12,13 ம் பக்கம்
கடைசி பக்கம்

நிர்வாகம்
Home
3 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்களின் புதூர் பற்றிய நெடிய விளக்கமான கட்டுரை மனதை தொட்டது. மேலும். புதூரில் ஆரம்பத்தில் குடி ஏறிய வம்சாவளியை சேர்ந்தவர்களும் அதன் கிளையார்களும் விபரமாக தொகுக்கப்பட்டு அளித்து இருக்கிறீர்கள். இதன் ஆசிரியர் பூ.மு.ஜமால் அவர்கள் முஸ்லிம்களுக்கான பல்வேறு புத்தகங்களை எழுதி இருக்கிறார்கள். (உதாரணம் மனோகரமான மண வாழ்கை ).
தமிழ் வருட கணக்குப்படி தாது வருடம் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை பின் வரும் 1996,1936,1876,1816,1756,1696,1636,1576,1516,1456 ஆம் ஆண்டுகளில் வந்து இருக்கிறது. 500 ஆண்டுகள் முன் என்றால் 1516 அல்லது 1456 ஆம் ஆண்டுகளில் இவர்கள் வலசை கிளம்பி இருக்கலாம் என்று கணிக்க முடிகிறது.
தங்களின் இணைய தள நிர்வாகத்தினர்களுக்கு புதூர் வாழ் ஜமாத்தினர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தங்களின் இந்த கட்டுரையில் ' கற்றறிவாளர்கள்' என்ற தலைப்பில் குட்டை காதர் லெப்பை ஆலிம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இவரதுவரலாறு நமதூர் முது கலை தமிழ் ஆசிரியர் ஜனாப் மர்ஹும் இ. அல்லாஹைர் , M.A., M.Ed M.phil அவர்களால் புதூர் பெரிய பள்ளி வாசல் திறப்பு விழா மலரில்எழுதிய கட்டுரையினை காணலாம்.
புதூரில் வாழ்ந்த மார்க்க அறிஞர்களில் பெரிய லெப்பை ஆலிம், குட்டை காதர்லெப்பை ஆலிம் ஆகியோர்கள் சிறப்புக்குரியவர்கள் ஆவார்கள்.
சிறந்த மார்க்க மேதையான குட்டை காதர் லெப்பை ஆலிம் அவர்கள் கி.பி 1795 இல் புதூரில் பிறந்தார். இவரின் இயற் பெயர் அப்துல் காதிர் லெப்பை. சற்றுகுள்ளமாக இருந்த்தால் " குட்டை காதர் லெப்பை " என்று மக்களால்அழைக்கப்பட்டார்.
இளமையில் இவர் கீழக்கரை சென்று தைக்கா சாகிப் வலியுல்லா அவர்களிடம்மார்க்க கல்வி பயின்றார்.அப்போது இவரின் பள்ளி நண்பராக குணங்குடிமஸ்தான் சாகிப் விளங்கினார்.பின்பு இவர் மேலப்பாளையம் சென்று அங்கு ஒருஆன்மீகப் பெரியாரிடம் ஆன்மீகக் கல்வியை பயின்றார்.
ஆன்மீகக் கல்வியை இவர் கற்று முடித்ததும் ஊர் திரும்பினார். இவரைஆலிம்ஷா வேலை பார்த்துக்கொண்டு, மக்களிடம் வரி வசூலித்துக்கொண்டும் இருக்குமாறு ஊர் பெரியவர்கள் கூறினர். அது இவருக்கு பிடிக்கவில்லை.
பின்பு இவர் வண்டி மாடுகள் வைத்து வாணிகத்தில் ஈடுபட்டார்.ஒரு சமயம் இவர்பொருள்களை ஏற்றிக்கொண்டு மற்ற வண்டிகளுடன் சேர்ந்து காட்டு மார்க்கமாகசெல்லும்போது சடை முடியுடன் கூடிய துறவி ஒருவர் எதிர்ப்பட்டு எந்த ஊர்வண்டி எனக் கேட்டறிந்து கொண்டு "உங்களில் புதூர் குட்டை காதர் லெப்பை வருகிறானா?என்று வினவினார்." ஆம் அவர் பின்னால் வந்து கொண்டுஇருக்கிறார் "என்று வண்டியில் இருந்தோர் பதில் கூறினர்.அதற்கு அந்த துறவிஅவர்களைப் பார்த்து " நெற்றியில் வடுக்காயமுடயவன் 'ஸ்லாம்' சொன்னதாக அவனிடம் கூறுங்கள் என்று சொல்லிக்கொண்டே வேகமாக சென்றுவிட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு வண்டியில் இருந்தோர் இவரிடம் இச்செய்தியயை கூறிய பொழுது " அவர்தாமே குணங்குடி மஸ்தான். அவரை நிறுத்தி வைக்காமல் விட்டு விட்டீர்களே "என்று கூறி வருந்தினாராம் இவர்.
சிந்தா அப்துல்லாஹ்.
ஒருதடவை குட்டை காதர் லெப்பை ஆலிம் அவர்கள், வியாபாரத்தின் பொருட்டு மதுரை சென்று இருந்தார் அப்போதுஅங்குள்ள முஸ்லிம்களை ஒரு பாதிரியார் அணுகி " உங்கள் அல்லா அகிலஉலகங்கள் அனைத்தையும் படைத்தான் என்று கூறுகிறீர்களே ஆழமான கடலைபடைத்த அவன் அதிலே தோண்டப்பட்ட மண்ணை எங்கு பொய் கொட்டினான்? சைத்தானை உங்கள் அல்லா நெருப்பால் படைத்தான் என்றும் அவனைமறுமையில் நெருப்பில் வீழ்த்தி வேதனை செய்வான் என்றும் கூறுகிறீர்கள். நெருப்பை நெருப்பால் எவ்விதம் வேதனை செய்ய இயலும்?". என்றுவினவினார்.அவர்களால் இக கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போகவே, குட்டை காதர் லெப்பை ஆலிம் மதுரை வந்து இருக்கிறார் என்று கேள்விப்பட்டுஇவரிடம் சென்று இச்செய்தியை கூறி அழைத்து சென்றார்கள்.
இவரிடமும் அப பாதிரியார் மீண்டும் இக் கேள்விகளை கேட்க இவர்கடப்பாறையை எடுத்து வரச் செய்து, அதனை மண்ணில் ஓங்கி குத்தி நன்குஅசைத்து பின்னர் கடப்பாறையினை வெளியே வெளியே எடுத்து, குத்தப்பட்டஇடத்தில் இருந்த பள்ளத்தினை காட்டி, " இப்போது இந்தப்பள்ளத்தில் இருந்த மண்எங்கு சென்றது " என்று கேட்க அந்த பாதிரியார் பேச வாயற்று வீற்றிருந்தார்.
பின்னர் இவர் அருகே கிடந்த மண்ணாங்கட்டியை எடுத்து அந்த பாதிரியார் தளிமீது ஓங்கி வீச, வேதனை தாளாது பாதிரியார் அலறினார்.அது கண்ட இவர்," மனிதன் மண்ணால் படைக்கப்பட்டவன் எவ்வாறு மண்ணால் படைக்கப்பட்டஉம்மை மன்னாங்கட்டியால் நான் அடிக்க உமக்கு வேதனை ஏற்பட்டதோ அதேபோன்றுதான் நெருப்பால் படைக்கப்பட்ட இப்லீஸை நரக நெருப்பில் வீழ்த்திஇறைவன் வேதனை செய்வான் என்று கூறினார்.பாதிரியார் இவரின்அறிவாற்றலை வியந்து தோல்வியை ஒப்புக்கொண்டு சென்றார்.
இவர் பல ஊர்களில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து கொண்டு வந்தார். ஒருதடவை இவர் மார்க்கபபிரச்சாரம் செய்வதற்காக மேலப்பாளையம் சென்றிருந்தபொழுது இவருடைய உருவைக்கண்டு எள்ளி நகையாடி சிலர் " வித்ரியாவுக்குஉம்மால் விளக்கவுரை கூற இயலுமா ? " என்று அறை கூவல் விடுத்தனர்.அந்தஅறைகூவலை ஏற்று இவர் விளக்கவுரை கூறத் துவங்கி, "பிஸ்மில்லாஹிர்ரஹ்மாநிர்ரஹிம் "என்பதற்கு மட்டும் மூன்று நாட்கள்விளக்கவுரை கூறினார்.அது கண்டு மக்கள் அடைந்த வியப்பிற்கு அளவேஇல்லை.
இவருடைய அடக்கவிடம் புதூர் பெரிய பள்ளிவாசலின் வடக்கு பகுதியில்உள்ளது.இவரின் அடக்கவிடத்தை ஒட்டி கிழக்குப்பக்கத்தில் பெரிய லெப்பைஆலிம் அவர்களின் அடக்கவிடமும், மேற்கு பக்கத்தில் மவுலவி ஹாபிஸ் காரிசெய்து உஸ்மான் பாகவி அவர்களின் அடக்கவிடமும் உள்ளன.
மேலும் குட்டை காதர் லெப்பை அவர்களின் மரபில் தோன்றிய . நஅ.இஸ்மாயில்லெப்பை, கருத்தலெவை என்ற முஹம்மது அப்துல்லாஹ், ஆலிம், விச்சாளிவகை முஹிதீன் அரபு ஆலிம், கொடிக்கால் பட்டடை முஹம்மது கனி ஆலிம், கடைய நல்லூரிலிருந்து வந்து புதூர் பெரிய பள்ளிவாசலில் ஆலிம்ஷாவாக பணியாற்றி புகழ் பெற்ற மவுலவி ஹாபிஸ் காரி சய்யிது ஷெய்கு உஸ்மான்பாகவி ஆகியோர் புதூருக்கு பெருமை சேர்த்த மற்ற மார்க்க மேதை ஆவார்கள்.
சிந்தா அப்துல்லாஹ்.
Post a Comment