Thursday, June 18, 2009

DR..ஜாஹிர் உசேன் கல்லூரி நிர்வாகத்தினரின் கவனத்துக்கு:

39 ஆண்டுகளுக்கு முன், நம்மூர் பெரியோர்களின் அதி தீவிர முயற்ச்சியினால் உருவாக்கப்பட்டு, இன்று சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் மிகச் சீருடன் விளங்கும் இக் கல்லூரின் பெருமையினால், நாமெல்லாம் இளையான்குடியில் பிறந்தத‌ற்கு "மாதவம் செய்திடல் வேண்டுமம்மா?" என்று உணர்ச்சி பெருக்குடன் குதூகலிக்கும் போது, தங்க கீரீடத்தில் மகுடமாக கூழாங்கல்லை பதித்தது போல், பளிங்கு மண்டபத்தின் முகப்பில் சாணி அடித்தது போல், ஓர் பதிவு.

DR. ஜாஹிர் உசேன் கல்லூரிக்கென தனியாக ஒரு "வெப்சைட்" கண்டிப்பாக வேண்டும். இதில் யாருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்க முடியாது. அப்படி உடன்பாடு இல்லாத‌வர்கள் நம்மூர் வளர்ச்சியினை விரும்பாதவர்களே..

அதற்காக இப்படியா? இந்த "வெப்சைட்" டை பார்த்து...உங்களுடைய முடிவுக்கே!!!???
***************************
ப‌டத்தின் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க‌வும்.

POWERED BY TUBUKKU
"டுபுக்கு" என்பது ஜப்பானிய மொழியோ? எங்களுக்கு தெரியவில்லை. அறிந்தவர்கள் கூறுவார்களா? புரிந்து கொள்வோம். இது தெரிந்து செய்யப்பட்டதா? தெரியாமலா? வேண்டுமென்றே கல்லூரியின் பெயரை கெடுப்பதற்கா? உலகம் முழுவதும் இதைப் பார்க்கிறார்கள், என்ன நினைப்பார்கள்?? ஒரு நிமிடம் யோசியுங்களேன்.. இந்த வார்த்தை தமிழர்கள் யாவரும் அறிந்ததே.. இது ஒரு சிறிய விசயம் தானே என்று ஒதுக்கிவிடலாமா?? "ஒரு குடம் பாலில் ஒரு துளி விசம்".. என்று எடுத்துக்கலாமா??

இதை நாங்கள் சொன்னால் நாங்கள் கெட்டவர்கள்.. இந்த வெப்சைட்டை உருவாக்கியவர்களுக்கு என்ன பேர்?? சம்பந்தப்பட்டவர்கள் கவணிப்பார்களா??? நமக்கேன் வம்பு!!!

நிர்வாகம்
***********************
எங்களுடைய "வெளிச்சத்தை"ப் பார்த்து, உடனே தன்னுடைய தவறை திருத்திக்கொண்ட, கல்லூரியில் உள்ள ஒரு சில "நல்ல உள்ளங்களுக்கு" எமது நிர்வாகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்...
இதைப் போல், உள்ளடக்கத்தில் உள்ள தவறுகளையும், இன்னும் தெரிந்தோ, தெரியாமலோ, விடுபட்ட சில தகவல்களயும், உண்மைகளையும், சிறிதும் மறைக்காமல், மறுக்காமல், ஒதுக்காமல் முன் வரலாற்று நிகழ்வுகளை, சிந்தித்து, தெளிந்து, நேர்த்தியான முறையில், கல்லூரியின் "நல் மணம்" கொண்டோர் வெளியிடுவார்களாக!!!
ஆமீன். மற்றவர்களுக்கும் எல்லாம் வல்ல இறையோன் நல்ல,உண்மையான சிந்தனைகளை வாரி வழ‌ங்கட்டும்.. நிர்வாகம்.

8 comments:

Anonymous said...

தாங்கள் குறிப்பிட்ட www.drzahirhusaincollege.com என்ற இணைய தளத்தினை ஆவலுடன் கிளிக் செய்தேன் { நான் அதில் பழைய மாணவன் என்பதால்)
1. HOME
2. ABOUT US
இதில் HISTORY என்பதில் எந்த செய்தியும் இல்லை. (இல்லாத செய்திக்கு தலைப்பு எதுக்கு?)
3. COURSE
இதிலும் ஒண்ணுமில்லை. (ஒரு வேலை எந்த கோர்ஸ் ம இல்லையோ )
4. FACILITIES
5. PHOTO GALLERY
சரி செய்திதான் இல்லை PHOTO வாது பார்ப்போம் என்று கிளிக் செய்தேன்.
ஒரு இளைஞர் போன செய்யிறது போல ஒரு PHOTO. அதன் கீழ்
சின்ன சின்ன வரியாய் ரொம்ப இருந்துச்சு.
கொஞ்சம் FONT லார்ஜ் பண்ணி பார்த்தேன்.
"CRAS INTERM SOLLICITUDIN ANTE"
அப்படின்னு தலைப்பு இருந்துச்சு. (ஒன்னும் புரியலே தெரிந்தவர்கள் கூறலாம்).
எல்லாமே அதே போல எதோ ஒரு பாசையில இருக்கு.
சரி கிளிக் பண்ணா PHOTO வரணும்ல அதுவும் இல்லே.
கடைசியா
"POWERED BY TUBUKKU" ன்னு இருந்துச்சு.
POWERED BY ன்னா புரியுது
TUBUKKU ன்னா என்னன்னு புரியலே
ஒரு வேல CORRESPONDENT உடைய புனை பேரா இருக்குமோ இருக்குமோ என்னமோ.
அட நல்ல காலேஜ் , நல்ல வெப் சைட்டு

Anonymous said...

4. FACILITIES
இதிலையும் ஒன்னும் இல்லே.
ஆனா ஒன்னு மட்டும் எல்லாத்திலையும் இருக்கு
"POWERED BY TUBUKKU"

Anonymous said...

I AM ALSO AN OLD STUDENT OF THIS COLLEGE. REALLY I AM PROUD TO BE THAT. AT THE SAME TIME IT IS SHAMEFUL TO ME TO SHOWING THIS WEBSITE TO OTHER MY COLLEGUES WHO ARE ALL WORKING WITH ME IN LONDON AND OTHER FORIGN COUNTRIES.

THE CONCERNED MANAGEMENT BODIES SHOULD GIVE AN IMMEDIATE ATTENTION ON THIS MATTER,OTHER WISE THEY CANT STOP THE SPOIL OF THE NAME, CREDITS AND HERITAGE OF OUR OWN COLLEGE ANYWAY;

NOW MY COLLEGUES AND FRIENDS ARE STARTING TO CALL ME LIKE THAT,''HEY BUDDIES, THIS PERSON IS FROM DUBUKKU COLLEGE OF ILYANGUDI''.

THE BAD IMPRESSION POSSESED WITH BAD NICK NAME OF OUR OLD STUDENTS, CURRENT STUDENTS AND FUTURE STUDENTS SHOULD BE ELIMINATED IMMEDIATELY. THIS IS THE TOPMOST RESPONSIBILITES TO THE MANAGEMENT COMMITEE.

WILL THEY DO IT AT THEIR EARLIEST POSSIBLE

KAMAL ANZAR
anz_4m@yahoo.co.uk

Anonymous said...

Assalamu allikum war
Dear Mr.Ilayangudiyinvelicham
Could you get the clarification about this from anyone in Dr.Zahir hussain college.
I went to ilayangudi college office in Mar '09 to get the application form for new membership thay told me that, this new commitee has hold to issue the new application and no one has not join the new member in last one nad half year and thay told we don't know why, you have to contact our correspondant.
I hope that Ilayangudiyinvelicham could get the reason for that.When thay will start to join the new members.
Thanks
Alaudeen

Anonymous said...

wassalaam

Thanks for ur comments

If u have been a close relative or a supporter of the College commity then u might have got that application by now(immediately).

webadmin

Anonymous said...

Assalamu Alaikkum
Dear Webadmin
Thans for your comments
Could you find out deeply why thay are not issue the application.
When thay will issue the application.Why thay are holding to issue the application.Kindly get the clear picture.I hope that you will do.Please.
And one more request could you make the comment box on your
home page.
Thanks.

Anonymous said...

இளையாங்குடியின் வெளிச்சம் இணைய தள நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.

தொடரட்டும் உங்கள் பணி.

இளையாங்குடியன்.

Anonymous said...

tubukk-aa enna nadakudhu college-la??????