Thursday, September 9, 2010

கல்லூரிக்கழகத்தின் கலக்கமும், குழப்பமும்;

Advt Hajee P.M.S.Tajudeen
கல்லூரிக்கழகத்தின் கலக்கமும், குழப்பமும்;
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
எல்லோருக்கும் எனது நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்


டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரிக்கழகத்தின் ஆயுள் அங்கத்தினராகிய நான்,31/08/2009ல் RTI Act 2005 ன் படி சில தகவல்கள் கேட்டிருந்தேன். அதன் கடித நகல் கீழே;
Click to Read

படங்களின் மேல் க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.

இதற்கு தர வேண்டிய முறையான பதிலை தராமல் நிர்வாகம் 26/09/2009 அன்று கீழ்கண்டவாறு 'குழப்பத்துடன்' பதில் அளிக்கிறார்கள். அதன் கடித நகல் கீழே Click to Read

ம‌றுப‌டியும் நான் மேல்முறையீட்டு ம‌னுவாக‌ 05/10/2009 அன்று கீழே காணும் ப‌திலை (வேடிக்கை,விசித்திர‌ம்,வேத‌னை) நிர்வாக‌த்துக்கு அனுப்புகிறேன்.
அதன் கடித நகல் கீழே
Click to Read


மேல் முறையீடு மனுவுக்கும் முன் எழுதிய பதிலையே
(Rs.5000/= வேண்டி) அனுப்புகிறார்கள்
(நிறையே 'ஜெராக்ஸ்' எடுத்து வைத்து இருப்பார்கள் போலும்).
அதன் கடித நகல் கீழே
Click to Read

இனிமேல் எத்தனை முறை கேட்டாலும் இதே ஜெராக்ஸ் காப்பிதான் வரும் என்று என்னி தமிழக தகவல் ஆணையத்திற்க்கு 20/10/2009 ல் புகார் மனு அனுப்பினேன்.
அதற்கு தமிழக தகவல் ஆணையம் என் புகாரை ஏற்று , பதிவு செய்து (Case No 26548/O1/09) 18/03/2010ல் கல்லூரி நிர்வாகத்திற்க்கு, நான் கேட்ட தகவல்கள் யாவும் வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து உள்ளது

அதன் உத்தரவு நகல் கீழே

Click to Read

நான் மறுபடியும் தமிழக தகவல் ஆணையத்திற்க்கு 29/04/2010 ல், இந்நிர்வாகத்தின் நிலையை எடுத்துக்காட்டி, இன்று வரை ஆணையம் 'விசாரனைக்கு' காத்து உள்ளேன்.தமிழக தகவல் ஆணையம் தன் கடமையைச்செய்யட்டும்..
ஆனால்... இந்த வருடம் 29/06/2010 அன்று, அதே RTI Act 2005 ன் படி இதே கல்லூரி நிர்வாகத்திற்க்கு 7 தகவல்கள் கேட்டுள்ளேன்.
அதன் கடித நகல் கீழே

Click to Read


இந்த 7 தகவல்களூம்,22/07/2010 அன்று கீழ்கண்ட விளக்கத்துடன் பதில் வந்தது. நானும் அவர்கள் கேட்ட Rs.22 /= M.O. மூலம் அனுப்பியுள்ளேன். நிர்வாக கடித நகல் கீழே;
Click to Read

இதே ஆயுள் உறுப்பினராகிய நான், இதே நிர்வாகத்திற்க்கு, இதே RTI Act 2005 சட்டம் மூலம் கேட்டதற்கு தகவல்கள் வழங்காமல் Rs.5000/= கேட்டு அலைக்கழித்தது ஏன்?

இன்று, இதே நிர்வாகம் தகவல் ஆணையம் குறித்தகெடுவுக்குள் தகவல்கள் வழங்க காரணமென்ன? இப்பொழுதுதான் RTI Act 2005 ஐ புரிந்து கொண்டார்களா?

இல்லை.... வ‌டிவேலு பாணியில் "அது போன வருஷம்,
இது இந்த வருஷம்" என்பார்களோ?!

டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரிக்கழகத்தின் பொதுக்குழு(2010) கூட்டத்தின் விபரங்கள் கீழே;
Click to Read




Click to Read
தீர்மானங்களின் நகல்








கல்லூரி நிர்வாகம் தந்த மேற்கண்ட தகவல்களில் சில, பல புரியாத வினாக்கள் எழுகின்றன.
விபரமறிந்தோர் விளக்கினால் நலமே!
மேலே கண்ட கல்லூரி மினிட் புத்தகத்தின் நகலில் மேல் பகுதியில் காணப்படும் பக்க எண்கள் (Whitener மூலம்) அழிக்கப்பட்டுள்ளன? எதற்காக?

டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி கழகத்தின் மொத்த ஆயுள் உறுப்பினர்கள் 768 ஆகும், பொதுக்குழுவிற்க்கு குறைந்தபட்சம் (கோரம்) 3ல் 1 பங்கு வேண்டும் என்பது பொதுவான நியதி.  
ஆனால் இங்கு 91 உறுப்பினர்களே வந்துள்ளார்கள்!
ஏன் முறையாக எல்லோருக்கும் அறிவிப்பு செய்யவில்லையா? இல்லை உறுப்பினர்களே பொதுக்குழுவை புறக்கனிக்கிறார்களா?
1983ல் 6 உறுப்பினர்களுடன் இச்சங்கம் ஆரம்பித்தபோது, பைலாவில் பொதுக்குழுவிற்கு கோரம் 25 உறுப்பினர்கள் வேண்டும்
என்று விதி உள்ளது.  
இன்று 768 உறுப்பினர்கள் இருக்கும் போதும் கோரம் 25 தானா? உறுப்பினர்கள் 7000 ஆன பின்பும் கோரம் 25 உறுப்பினர்கள் போதுமா?
தீர்மாணத்தின் எண் 5 / K, L ல் கண்ட, NAAC கமிட்டிக்கு
Rs.3,03,672/= இத்தனை லட்சங்கள் NAAC கமிட்டிக்கு செலவு செய்வது விதியா? இவ்வளவு செலவு செய்தால்தான் NAAC கமிட்டியின் A Grade தர சான்றிதழ் கிடைக்குமோ? என்பது எனக்கு புரியவில்லை?..

பல ஐட்டங்களுக்கு செலவு செய்தது Rs. 24,93,649/=
பல ஐட்டங்கள் என்றால் என்ன? யாரேனும் விளக்கலாமே?.
நன்றி.
வஸ்ஸலாம்

Advt Hajee P.M.S.Tajudeen

No comments: