அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)…
நான் 16/06/2010 அன்று சென்னை வந்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் ஆஜராகிய விபரமும், தீர்ப்பும் வெளியிட்டது படித்திருப்பீர்கள் அல்லவா?
இன்றும் (22/07/2010) இளையான்குடி கூட்டுறவு நகர வங்கிக்கு, நான் தனித்தனியே மனுமூலம் கேட்ட தகவல்கள் தராததினால், என்னுடைய இரண்டு மனுக்களும் முறையே இன்று காலை 10.30 A.M.,11.30 A.M. க்கு தகவல் ஆணையம் சென்னை. ஆஜராக சம்மன் வந்தது...
Click to Enlarge
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில், குறிப்பிட்ட நேரத்தில் நான் ஆஜராகி விட்டேன். பேங்க் சார்பாக (ஊரிலிருந்து வந்த Bank ஊழியர்கள் ஆணையத்திற்க்கு நேரில் வர தயங்கிவிட்டதாக தகவல்) திரு S.P. யுவராஜ் என்ற வக்கீல் ஆஜரானார்கள்.
ஆணையர் திருமதி.முனைவர். சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் முன்னிலையில் விசாரணை;
என்னுடைய முதல் மனுவின் நிலையை விளக்கமாக எடுத்து கூறினேன். வக்கீல் அவர்கள் பேங்க் சார்பாக பேச “வக்காலத்” தாக்கல் செய்தார்.
ஆணையர் அவர்கள் வக்கீலைப்பார்த்து “மனுதார் தகவல் வழங்கும் உரிமைச்சட்டப்படி கேட்ட தகவல்களை குறித்த காலத்திற்க்குள் ஏன் அளிக்கவில்லை? இது குற்றமாகாதா?” அதற்கு வக்கீல் அவர்கள் “இந்த பேங்க் தகவல் வழங்கும் உரிமைச்சட்டத்திற்க்கு கட்டுப்பட்டதல்ல.”என்றவுடன் ஆணையர் அவர்கள் "ஒரு வக்கீலாக இருந்து கொண்டு,சட்டம் படித்து விட்டு, இப்படி பதில் அளிப்பது மிகவும் வேதனையாக உள்ளது" என்றார். மீண்டும் அவர் வக்கீலிடம் “எந்த விளக்கமும் தேவையில்லை 16/06/2010 அன்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் கொடுத்த தீர்ப்பே இறுதியானது என்றும்,எல்லா வினாக்களுக்கும் அதில் தெளிவாக விளக்கம் அளித்திருக்கிறார்கள் என்றும், கூட்டுறவு பேங்க் தகவல் வழங்கும் உரிமைச்சட்டத்திற்க்கு கட்டுப்பட்டது என்றும், இந்த பேங்க் தனியார் நிறுவனமல்ல. இதுவும் பொது நிர்வாகமே ஆகவே மனுதார் கேட்டதகவல்களை 2 வாரத்திற்க்குள் வழங்கவும் உத்திரவிட்டார்கள். ..
Click to Enlarge
RTI Summon for 11.30.A.M
RTI Summon for 11.30.A.M
சிறிது நேரம் கழித்து மற்றொரு மணுவும் விசாரணைக்கு வந்தது, இதே நிகழ்வுதான் .இந்த விசாரணையிலும்,மேலும் வக்கீல் அவர்கள் “கல்லூரியின் செயலர் கல்லூரிக்கழகம் சம்பந்தப்பட்ட தகவல்கள் எதுவும் கொடுக்க கூடாது” என்று எழுத்து மூலமாக கொடுத்துள்ளார்' என்று வினவினார் அதற்கு ஆணையர் அவர்கள் “மனுதார் ஒன்றும் கல்லூரியின் செயலர்,முதல்வர், இவர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கேட்கவில்லையே? சங்கத்தின் தகவல்கள்தானே கேட்கிறார்,கொடுக்ககூடாது என்று செயலர் எப்படி கூறமுடியும்” என்று பதிலுரைத்தார்கள்.மேலும் ஆணையர் அவர்கள் “நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலிருந்து,பொது தகவல் அலுவலரை தூத்துக்குடிக்கு வரவழைத்து மனுதாரர் கேட்ட தகவல்களை வழங்க உத்திரவிட்டு அவர்களும் வழங்கியுள்ளார்கள்.இந்த கல்லூரி செயலர் வழங்கக்கூடாது என்று எப்படி கூறமுடியும்” என்று கூறிவிட்டு மனுதார்(நான்) கேட்ட தகவல்களை 2 வாரத்திற்குள் இனாமாக வழங்க உத்திரவிட்டார்கள்...
"எத்தனை முறை வீழ்ந்தாலும் சிலர் மீசையில் மண் ஒட்டவில்லை" என்பார்கள்..இது பழைய,புதிய மொழி..
மேலும், இன்று ஹை-கோர்ட்(மதுரை பெஞ்ச்)ல், காவல்துறைக்கு இக்கல்லூரி நிர்வாகஸ்தர்கள் மீது முதல் குற்றப்பத்திரிக்கை (FIR) பதிவு செய்து விசாரிக்க, நான் வாங்கிய 'டைரக்ஷ்ன்'(CRL op5036/2010)இன்னும் அமல்படுத்தவில்லையென்று CONTEMPT PETITION ADMISSION(CONTEMPT OF COURT)
ஹை - கோர்ட்டில் ஃபைல் செய்தேன். அதுவும் இன்று 441/2010 எண்ணாக விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் …
RTI Act 2005 ன்கீழ், NAAC கமிட்டிக்கு நான் கேட்ட தகவல்கள் யாவும் கிடைக்கப்பெற்றேன். அதன் “முழு விபரமும்” அதிவிரைவில் வெளியிடுகிறேன்.
இந்த இணையத்தின் வாயிலாக இளையான்குடி வாழ் சகோதரார்களுக்கு எடுத்துரைக்கிறேன்
K.M.Akbar Ali- (Chennai)
No comments:
Post a Comment