I.N.P.T பள்ளியின் நிர்வாககுழு தேர்தல் வரும் 08/08/2010 அன்று நடைபெறுவதாக வக்ப் வாரிய இராம்நாட் கண்காணிப்பாளர் ஜனாப்.M. அன்வர் அலி அவர்கள் அறிவிப்பாக, துண்டு பிரசுரம் INPT பள்ளியில் ஜூம்மா தொழுகைக்குப்பின் விநியோகிக்கப்பட்டது, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் வாரிய கண்காணிப்பாளரை அனுகி பெயரை இனைத்துக்கொள்ளலாம்.
Click to Enlarge
INPT நிர்வாக குழு தேர்தலை ஏன் இவ்வளவு அவசரகதியில், வக்ஃப் வாரிய கண்கானிப்பாளர் அறிவிக்கிறார்கள் என்று விளங்கவில்லை. அறிவிப்பு வெளியாவது 23/07/2010 மதியம் ஜும்மாவுக்குப்பின், வேட்பு மனு தாக்கல் 26/07/2010(திங்கட்கிழமை), அன்றே வேட்பு மனு தாக்கலுக்கு இறுதி நாளாம், மதியம் 3.30 மணிக்கு பட்டியல் வெளியீடாம். வெளியூரிலிருக்கும் ஜமாத்தார்கள் (போட்டியிடவிரும்புபவர்கள்) எப்படி ஊர் வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும் என்பது புரியாத புதிர். எப்படியோ? அல்லாவின் நாட்டம்…
நல்லதொரு நிர்வாகக்குழு அமைய INPT ஜமாத்தார்கள் நமது பள்ளிவாசலுக்கு ‘ஊழலற்ற நிர்வாகத்தை’ தேர்ந்தெடுத்து பள்ளிவாசலின் வளர்ச்சியை காண்போமாக...
ஜமாத்தார்களே, முந்தைய 'ஊழல் நிர்வாகத்தினரை' (பள்ளிவாசலை பறி கொடுத்தவர்களை) ‘புறந்தள்ளி’, பாதுகாவல் தேடுவோமாக...
வரும் காலத்திலாவது INPT நிர்வாகக்குழு தனிப்பட்ட ஜமாத்தாரிடம் வீண் காழ்ப்புணர்ச்சி காட்டாமலும், சொந்த குரோதங்களை பொது நிர்வாகத்தில் பிரதிபலிக்காமலும் அமைய எல்லா வல்ல இறைவனிடம் மண்றாடுவோமாக...
ஆமீன், ஆமீன், யா ரப்பில் ஆலமீன்...
No comments:
Post a Comment