Advt.
இளையான்குடி சகோதரர்கள் யாவரும் தடை செய்யப்பட்ட (CONTRABAND) பொருட்களை கடத்தி பணம் சம்பாரித்ததாகவும், என்னையும், என் குடும்பத்தார்களையும் மிகக் கேவலமாக சித்தரித்துக்காட்டி, பல்கலைக்கழக மாணியக்குழுவுக்கு எழுதியதால், நானும், என் குடும்பத்தார்களும் இன்றுவரை தீராத மன உழைச்சலுக்கு ஆளாக்கிய, டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி "பெருமைக்குரிய" முதல்வர் அவர்களும், இம்முதல்வருக்கு இப்படி எழுத ஆலோசனையும், தானே இதை 'எழுதியதாக' ஒப்புக்கொள்ளும் 'கன்னியவான்' செயலாளர் அவர்களிடமும், நான் U.G.C க்கு 23/03/2010 அன்று எழுதிய ‘மறுப்பு அறிக்கை ‘ வாயிலாக விளக்கங்கள் கேட்டதற்க்கு, டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி முதல்வரும், செயலாளரும் இன்றுவரை U.G.C. க்கு பதில் அனுப்பினார்களா? இல்லையா? என்று RTI ACT 2005 ன்படி 10/06/2010 அன்று எழுதியதின் காரணமாக U.G.C. டெல்லி முகவரியிலிருந்து U.G.C. ஹைதராபாத் முகவரிக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் கீழே வருமாறு;
Click to Read
இதன் விளைவாக U.G.C ஹைதராபாத் முகவரியிலிருந்து டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி முதல்வருக்கு 24/06/ 2010 அன்று எழுதிய கடிதத்தில் என்னுடைய மறுப்பு அறிக்கைக்கு வெகு விரைவில் (Expedite) பதில் தறுமாறும், இதற்காக தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இக்கடிதத்தின் நகல் கீழே வருமாறு;
Click to Read
நமதூர் சகோதரர்களுக்கு என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் யாதெனில்;
இக்கல்லூரியில் நான் பொருப்பில் வருதற்க்காகவோ, கல்லூரியை ஆட்சி செய்து பல லட்சக்கணக்கில் பணம் சம்பாரிப்பதற்காகவோ, எனக்கு இக்கல்லூரியில் வேலை வேண்டியோ, என்னுடைய சுய லாபத்துக்காகவோ, அல்லது வீண் பெருமைக்காகவோ இந்த முயற்ச்சிகளில் ஈடுபடவில்லை என்று திட்டவட்டமாக, அருதியிட்டு, உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.
நமதூர் பெரிய மனிதர்களாகிய ஒரு சிலர் மட்டுமே கடும்பாடுபட்டு இக்கல்லூரியை உருவாக்கி விட்டு, பின் வரும் சந்ததிகள் "காத்து" வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்(அல்லாஹ்வே! அவர்களுக்கு நீதி நாளில் நல்ல தீர்ப்பை வழங்குவாயாக.. ஆமீன்)
ஆனால் இன்று நடப்பதென்ன? சகோதரர்களே! நீங்கள் யாவையும் அறிவீர்கள்.. அறிந்தும், தெரிந்தும் 'மெளனம்' சாதிக்கிறீர்கள்.. போராட தயங்குகிறீகள்.. ஏன்? ஏன்? ஏன்?
இன்று நடப்பதெல்லாம் யாரோ ஒரு 'காசியார்' அக்பர் அலிக்குத்தானே! அவனும், அவன் குடும்பமும் எப்படி போனால் என்ன? நமக்கென்ன வந்தது? இன்று ஒரு அக்பர் அலிக்கு இந்த நிலைமை! நாளை எத்தனை அக்பர் அலிக்கோ? ஆனால் என்னைப்போல் தட்டிக்கேட்க 'நிச்சயமாய்' பல அக்பர் அலி உருவாகுவார்கள்.
வீரத்துக்கும், தன்மானத்துக்கும் பெயர் பெற்ற இளையான்குடியர்களே ! நீங்கள் யாவரும் போராட வந்து விட்டால் , நான் சிறிது களைப்பாறலாமே!
மன்றாடிக்கேட்டுக்கொள்ளும்
K.M.அக்பர் அலி
1.தக்கட்டை தெரு,
இளையான்குடி.
Advt
No comments:
Post a Comment