Wednesday, June 16, 2010

RTI Act 2005ன் கீழ், இளையான்குடி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் Vs ஜனாப் K.M .அக்பர் அலி

UPDATED ON 19/06/2010

Advt

ஜனாப் K.M. அக்பர் அலி அவர்கள், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையரை
16-06-2010 அன்று காலை சென்னையில் நேரில் சந்தித்து,  இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி,  ஆணையத்தின் உத்தரவுகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்றும், ஆணையத்தின் உத்தரவுப்படி தவல்கள் தரவில்லையென்றும் புகார் செய்ததற்க்கு, மதிப்பிற்குரிய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையர் திரு S. ராமகிருஷ்னன் .I.A.S.(Rtrd) அவர்கள் அறிவுரைப்படி, K.M. அக்பர் அலி அவர்கள் ஆணையத்துக்கு முறைப்படி எழுதிக்கொடுத்த மனுவின் நகல்கள் கீழே;

க்ளிக் செய்து தோன்றும் திரையில் மீண்டும் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்


ஜனாப் K.M. அக்பர் அலி-ILY



Advt

ஜனாப் K.M. அக்பர் அலி அவர்கள், இளையான்குடி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட் நிறுவனத்திற்க்கு RTI Act 2005ன் கீழ் சில தகவல்கள் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள்.இதற்க்கு அந்நிறுவனம் தகவல் தர மறுப்பதுடன், RTI Act எங்களைக்கட்டுப்படுத்தாது என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

இதன் காரனமாக ஜனாப் K.M.அக்பர் அலி அவர்கள், தகவல் உரிமை ஆணையத்திற்க்கு புகார் அளித்துள்ளார்கள்.

புகாரின் அடிப்படையில், ஆணையம் இன்று (16/06/2010) இரு சாராரையும் நேரில் சென்னைக்கு அழைத்து விசாரித்ததில்;

I.C.U.வங்கி சார்பாக அதன் தனி செயலர், மற்றும் 2 அலுவலர்களும், மனுதார் சார்பாக அக்பர் அலியும் ஆஜரானார்கள்

இளையான்குடி கூட்டுறவு நகர வங்கி லிமிடெட், தன்னுடைய நிலையைவிட்டு விலகாமல் எப்பொழுதும்போல் 'அதே' வாக்கு மூலத்தை அளித்துள்ளார்கள் என்றும், அதற்கு தலைமை தகவல் ஆணையர் "உங்கள் வழக்கு, இந்த விசாரனையைக்கட்டுப்படுத்தாது. இந்த விசாரனைக்கு என்று தனியாக “தடைஉத்தரவு” வங்கியுள்ளீர்களா? என்றும், மனுதாரருக்கு கேட்ட தகவல்களை ஆர்டர் கிடைத்த 3 தினங்களுக்குள் கொடுக்க வேண்டும், மற்றும் மனுதார் சென்னை வந்து போன சிலவு தொகைக்காக ரூ 800/= ஐ I.C.U. பேங்க் கொடுக்கவேண்டும் என்றும், தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது என்று, ஜனாப் K.M. அக்பர் அலி அவர்கள் சென்னையிலிருந்து தெரிவிக்கிறார்கள்.

ஜனாப் K.M. அக்பர் அலி 
சென்னை (இருப்பு)
Advt

No comments: