Friday, November 20, 2009

ICUB Vs S.P.S. Zafrullaa-RTI அதிரடி தீர்ப்பு

advt.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் நடைபெற்ற வழக்கும் அதன் தீர்ப்பின் சுருக்கம் தமிழில். முழுமையான தீர்ப்பு ஆங்கில ஆவணங்களில்..
********************
தகவல் உரிமை சட்டப்படி கேட்ட தகவலகளை தர மறுத்ததற்காக‌ நடை பெற்ற வழக்கில் தகவல் உரிமை கமிஷன் விசாரணை நடத்தி பிறப்பித்த உத்திரவு.
விசாரணை 25.09.2009 தமிழ்நாடு தகவல் கமிஷன் அலுவலகம். சென்னை.

முன்னிலை:
1.ஸ்டேட் சீப் இன்ஃப்ர்மேஷன் கமிஷனர்.
2ஸ்டேட் இன்ஃபர்மேஷன் கமிஷனர் .

வாதி : சுளியங்கச்சி S.P.S.ஜஃபருல்லா

பிரதி வாதி : தகவல் அதிகாரி, இளையான்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங்


தகவல் உரிமை சட்டப்படி இளையாங்குடி
மனுதாரர் சுளியங்கச்சி ஜஃபருல்லா அவர்கள் பொது நலம் கருதி இளையான்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங்கிடம் அதன் தகவல் அதிகாரி வாயிலாக 1.11.2008ல் தகவல்கள் கோரியதற்கு,

17.11.2008ல் இளையான்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங் தகவல் அதிகாரி அதை தரமுடியாதெனெ செல்லத்தகுதியில்லாத காரணங்களை மேற்கோள் காட்டி மறுத்துவிடவே,

21.11.2008ல் வாதி
1.ரிஜிஸ்ட்ரார் ஆஃப் சொசைட்டி,சிவகங்கை
2.ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கோஆபரேடிவ் சொசைடீஸ் ஆகிய இருவருக்கும் மனு தாக்கல் செய்கிறார்.

30.12.2008 ல் சிவகங்கையிலிருந்து வாதிக்கு தகவல் தருமாறு கிடைத்த உத்தரவையும் இளையான்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங் தகவல் அதிகாரி செயல்படுத்தாததால்,

5.1.2009 ல் வாதி மாநில தகவல் கமிஷனில் இட்ட முறையீட்டுக்கு 22.04.2009ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு,

இளையான்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங் தகவல் அதிகாரி ரிசர்வ் பேங் ஆஃப் இண்டியாவின் வங்கி சட்டங்களையும், இளையான்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங் ஒரு பொது ஸ்தாபனம் அல்ல என‌வும் மேற்கோள் காட்டி கூறி வரும் விவாதங்கள் இவ்வழக்கில் ஏற்றுக் கொள்ள கூடியதில்லை என கூறி
22.05.09ல் வாதிக்கு 3 நாட்களுக்கள் கேட்ட தகவல்களை தருமாறு கமிஷன் உத்தரவிட்டது.

15.06.09 ல் இளையான்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங் தகவல் அதிகாரி வாதிக்கு தக‌வல் தர மேலும் மறுத்து கடிதமூலம் தெரிவித்ததை 17.06.09ல் சிவகங்கை தகவல் முறையீடு அதிகாரியின் மூலமாக உறுதி செய்யப்பட்ட நிலையில்,

24.06.09 மனுதாரர் மறுபடியும் மாநில தகவல் கமிஷனுக்கு முறையிடுகிறார்.

25.09.2009 ல் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கீழ் கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
4 வாரத்துக்குள் வாதிக்கு கேட்ட தகவல்களை கொடுத்து வாதியிடமிருந்து தகவல் பெற்றுக் கொண்டு விட்ட‌தற்கான அத்தாட்சியை கமிஷனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பிரதிவாதி இளையான்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங் தகவல் அதிகாரிக்கு இவ்வழக்கை இழுத்தடித்தற்காக ரூபாய் 25,000 அபராதம் விதித்து

வசூலித்து அரசாங்க கஜானாவில் செலுத்தியதை சிவகங்கை ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கோஆபரேடிவ் சொசைட்டீஸ் உறுதிப்படுத்த வேண்டும்.

மனுதாரர் அனைத்து தகவல்களையும் இலவசமாக பெறுவதுடன்

இதுவரை செலுத்தி இருக்கும் தொகைகளை திரும்ப பெறுவதுடன்

பிரதிவாதி வீணில் வாதியை இழுத்தடித்து அனாவசியமாக விசாரணைக்கு ஆஜராக செய்ததற்கு ரூபாய் 1000 பயண சிலவு இழப்பீடு தொகையாக வாதிக்கு கொடுக்க வேண்டும்.


இந்த உத்தரவிலிருந்து 6 வார காலதிற்குள்ளாக வேண்டுமென்றே விடாது தகவல் தர மறுத்து வந்ததனால் பிரதிவாதி இளையாங்குடி கோஆபரேடிவ் அர்பன் பேங்கின் தகவல் அதிகாரி மீதும் APPELLATE AUTHORITY மீதும் சட்டப்பிரகாரம் குற்றப் பதிவு செய்து அதனை பற்றிய அறிக்கையை கமிஷனுக்கு சமர்ப்பிப்பதுடன்.

வேண்டுமென்றே விடாப்புடியாக, தொடர்ந்து அடாவடியாக‌ இந்நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக இதன் அடிப்படையிலான விசாரணை கால கட்டத்தில் அவர்களை சஸ்பெசன்சனில் வைத்து இருப்பது தேவையா என்பதை பரிசீலிக்குமாறும் ரிஜிஸ்ட்ரார் ஆஃப் சொசைட்டீஸ் க்கு அறிவிக்கப்படுகிறது.


மேற்கண்ட உத்தரவுகள் முறையாக நிறைவேற்றபடுவதை ரிஜிஸ்ட்ரார் சொசைடீஸ், செகரடரி கோஆபரேசன் ஃபுட்ஸ் , கன்ஸூமர் ப்ரடக்ச‌ன் டிபார்ட்மென்ட் ஆகியவை நேர்முகமாக பொறுப்பேற்க வேண்டும்.
தவறினால் தகவல் உரிமை சட்டத்தை புறக்கணித்து தொடர்ந்து கமிஷனின் உத்தரவுகளை அவமதித்து வந்திருப்பதனால் உரிய இடங்களின் மூலம் கமிஷனின் மேல் நடவ‌டிக்கை தொடரும்.

தகவல் உரிமை சட்டத்தை புறக்கணிப்பது, கமிஷனின் உத்தரவுகளை அவமதித்து நடப்பதற்காக‌ பொது த‌க‌வல் அதிகாரிக‌ளையும் APPELLATE AUTHORITY ஐயும் சஸ்பென்ஷனில் வைக்கலாமா என்ற கேள்வியை பரிசீலிக்குமாறு ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கோஆபரேடிவ் சொசைடீஸ் ஐ கமிஷன் பரிந்துரைக்கிறது.
E.&O.E
தமிழ் மொழி பெயர்ப்பில் பிழைகளும் விடுதல்களும் இருக்கக்கூடும். ஆவணங்களின் ஆங்கில வாச‌க‌ உள்ளடக்கமே சரியானதாக எடுத்துக் கொள்ள‌ வேண்டும்.
க்ளிக் செய்து படிக்கவும்.தோன்றும் திரையில் படத்தில் மீண்டும் ஒரு க்ளிக் செய்து மேலும் பெரிதாக்கலாம்.

S.P.S ZAFRULLAH 
No. 25 VIJAYAN STREET,
ILAYANGUDI 630 702

advt.

3 comments:

IRFAN said...

இளையான்குடி மக்கள் இனிமேல் தைரியமாக கேள்வி கேட்க முன்வரவேண்டும் என்பதை ஜபருல்லாஹ் அவர்கள் நமக்கு காட்டிஉள்ளார்கள்.

Anonymous said...

ilayangudy people said.................
mr s.pszafarullah more work.if you workhard you will get nalla ilayangudi.like all are try to nallailayangudy.you will forget the addimailife.today you are a indipendentair.thanks to velichamand jafarullah.

ilayangudian said...

சுப்ரீம் கோர்ட்டுக்கே உத்தரவிடும் தகவல் ஆணையம்.

கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம்.

புதுடில்லி : "வழக்கு ஒன்றில் தனக்கு வேண்டிய நபருக்கு சாதகமாகச் செயல்படும்படி, சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு கட்டளையிட்ட மத்திய அமைச்சர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் தெரிவிக்க வேண்டும்' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருப்பவர் ரகுபதி. இவர் சில மாதங்களுக்கு முன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, "மத்திய அமைச்சர் ஒருவர் தன் வக்கீல் மூலமாக என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

சி.பி.ஐ., விசாரிக்கும் வழக்கு ஒன்றில், தனக்கு வேண்டிய நபருக்கு சாதகமாகச் செயல்பட வேண்டுமென கட்டளையிட்டார்' என்றார்.

சென்னை ஐகோர்ட் நீதிபதியின் இந்தக் குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர், மத்திய தகவல் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருந்ததாவது: வழக்கு விசாரணையில் சாதகமாகச் செயல்படும்படி தனக்கு கட்டளையிட்ட அமைச்சர் தன்னிடம் நேரடியாகப் பேசவில்லை என, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவரத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

அதனால், அந்த மத்திய அமைச்சர் யார் என்ற விவரத்தை தெரிவிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் வாஜாகத் அபிபுல்லா, ""சுபாஷ் அகர்வால் கேட்ட விவரங்களை 15 நாட்களுக்குள் தர வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட்டிற்கு உத்தரவிட்டார்.

http://www.dinamalar.com/topnewsdetail.asp?news_id=1595