ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவித் தொகை என்று அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ஒரு ஜமாஅத் செய்து வருவதாக அறிந்து அது பற்றி விசாரித்தோம்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி புதூரைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள், சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. தங்களுக்கென்று புதூர் முஸ்லிம் நற்பணி மன்றம் என்ற அமைப்பை கடந்த சில ஆண்டு துவங்கி, அதற்கென சென்னை சேப்பாக்கம் தைபூன் அலிகான் தெருவில் இரு இடத்தை வாங்கினர்.
பத்தாண்டு காலம் பணிகள் ஏதுமின்றி இருந்த இடத்தில், இளைஞர்கள் சிலரால் சென்னை வாழ் புதூர் மக்கள் நலச் சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, மேற்படி இடத்தில் தற்போது கல்யாண மண்டபம் ஒன்று கட்டப்பட்டு, மிகக் குறைந்த வாடகையில் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஜமாஅத்தை சேர்ந்த ஏழைகளுக்கு முற்றிலும் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. இதில் வரும் வருமானத்தை ஜமாஅத்தைச் சேர்ந்த ஆதரவற்ற முதியோர்கள் சுமார் 200 பேருக்கு மாதம் ரூ.200 வீதம் உதவித்தொகை வழங்கி வருகின்றனர்.
இந்தச் சிந்தனை எப்படித் தோன்றியது என அந்த அமைப்பின் நிர்வாகிகளான சுபுஹான் மற்றும் காதர் கனி ஆகியோரிடம் கேட்டபோது, "இளைஞர்களாகிய நாங்கள் இக்கட்டிடத்தை கட்டி முடித்து விட்டு சில பிரச்சினைகளால் நாங்கள் நிர்வாகத்திலிருந்து வெளியேறியபோது, இதில் வரும் மண்டப வாடகையை நமது ஜமாஅத்திலுள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு பயன்பெறும் வகையில் செய்துவிட்டு வெளியேறுவோம் என முடிவு எடுத்து செயல்படுத்திவிட்டு, வெளியேறினோம்.
ஆனால் அல்லாஹ்வுடைய நாட்டத்தால் நிர்வாகம் மீண்டும் எங்களிடமே வந்து சேர்ந்தது. அது முதல் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். மேலும் சுமார் இரண்டு ஆலிம்களைக் கொண்டு சுமார் 100 குழந்தைகளுக்கு குர்ஆன் வகுப்புகளையும் நடத்தி வருகிறோம். ரமலான் மாதத்தில் இந்த மண்டபத்தை இஃப்தார், ஐவேளைத் தொழுகை, பயான் பெண்களுக்கான இரவுத் தொழுகை போன்ற காரியங்களுக்காகவும் பயன்படுத்தி வருகிறோம்", எனக் கூறினார்.
மேலும் மற்றொரு அமைப்பான அழகிய கடன் உதவி அறக் கட்டளை மூலம் வட்டியில்லாத கடனுதவி திட்டம் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். ஜகாத், ஃபித்ரா போன்றவற்றை மக்களிடம் வசூலித்து அதையும் சிறப்பாக விநியோகித்து வருகின்றனர்.
பல நன்மையான காரியங்களுக்கு புதூரைச் சேர்ந்த முஸ்லிம்கள் முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பதற்கு சாட்சியம் கூறும் விதமாக இருக்கிறது இவர்களின் சேவைகள்.
'எஸ்.எம்.எஸ். செய்தி சேவையை' துவக்கி ஊர் சம்பந்தமான அனைத்து செய்திகளையும் உலகெங்கும் உள்ள அனைத்து புதூர் ஜமாஅத்தார்களும் அடுத்த அரை மணி நேரத்திற்குள் எஸ்.எம்.எஸ். வழியாக தெரிந்து கொள்ளச் செய்கின்றனர்.
"சென்னையில் ஏதாவது ஒரு கபர்ஸ்தானில் பெருங்கூட்டமாக ஜனாஸா நல்லடக்கம் நடைபெற்றால், அது புதூர் ஜமாஅத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர் எனும் அளவிற்கு செய்திகள் உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டு, ஜனாஸா அடக்கஸ்தலத்தில் மக்கள் குவிந்து விடுவர்", என்கிறார் சுபுஹான்.
இதைக் கேட்டபோது நமக்கு வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சென்னையில் வசிக்கும் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த எந்த ஜமாஅத்துக்களிடமும் இல்லாத பிற ஜமாஅத்துக்கள் பின்பற்றப்பட வேண்டிய சில முன்மாதிரிகள் இளையான்குடி புதூர் ஜமாஅத்திரிடம் இருப்பது உண்மை என்பதை உணர்ந்து, அவர்களுக்கு நமது பாராட்டுதலை தெரிவித்து விடைபெற்றோம்.
(இப்னு உசேன்) ஆதாரம்:சமுதாய மக்கள் ரிப்போர்ட்
நற்பனி மன்றத்தைப்பற்றி மேலும்,
நற்பனி மன்றத்தைப்பற்றி மேலும்,
1989 ம் ஆண்டு, புதூர் முஸ்லீம் நற்பனி மன்றத்திற்க்காக இடம் வாங்கப்பட்டது.
1998 ல் இளைஞர்கள் உருவாக்கிய 'சென்னை வாழ் புதூர் மக்கள் நல சங்கம்' என்ற அமைப்பு கட்டியது
2006 ஆம் ஆண்டிலிருந்து "புதூர் முஸ்லீம் நற்பனி மன்றம் (இளையான்குடி)" என நிரந்தர பெயரில் இயங்கி வருகிறது
நிறுவனர்கள்
ஜனாப் இரங்கூன் சுலைமான் Ex. M.C. அவர்கள்
" A.கான் முஹமது "
" O.K.J.ஜெயினுலாபுதீன் "
" M.S.P.கரிம்கனி "
" ஒட்டன்சத்திரம் காதர் "
" S.ஜான் முஹமது "
" S.M.S.சாகுல் ஹமீது "
" A.கான் முஹமது "
" O.K.J.ஜெயினுலாபுதீன் "
" M.S.P.கரிம்கனி "
" ஒட்டன்சத்திரம் காதர் "
" S.ஜான் முஹமது "
" S.M.S.சாகுல் ஹமீது "
தற்போதைய நிர்வாகிகள்:
ஜனாப் A.சுபுஹான் (தலைவர்) அவர்கள்
" M.S.P.கரீம்கனி (செயலர்) "
" M.S.ஹக்கீம் (பொருளாளர்) "
" Y.முஹம்மது (உறுப்பினர்) "
" காதர் கனி " "
" S.முஹம்மது " "
" கரடன் லியாக்கத்தலி " "
" சாலீஹ் " "
" தஸ்தஹிர் " "
" P.S. செங்கிஸ்கான் " "
" தாரிக் " "
" முஹமது ரஃபி " "
" O.K.J.ஜெயினுலாபுதீன் " "
" ஹுதரத் அஜ்மல் " "
" M.S.P.கரீம்கனி (செயலர்) "
" M.S.ஹக்கீம் (பொருளாளர்) "
" Y.முஹம்மது (உறுப்பினர்) "
" காதர் கனி " "
" S.முஹம்மது " "
" கரடன் லியாக்கத்தலி " "
" சாலீஹ் " "
" தஸ்தஹிர் " "
" P.S. செங்கிஸ்கான் " "
" தாரிக் " "
" முஹமது ரஃபி " "
" O.K.J.ஜெயினுலாபுதீன் " "
" ஹுதரத் அஜ்மல் " "
நிர்வாகம்
Home
1 comment:
THE REAL PART OF PUDUR PEOPLE.THNANKS TO COMMITTE.ONE OF THE GOVERMNTPUDER SOCIETY.(makkalpannam makkalku shalukrthu) to issue the news realygreat.khan.
Post a Comment