Sunday, November 8, 2009

பொக்கிஷம்

Click to Read
POKKISAM-"Siru Thondan/1st March 1972"

நமதூரைச்சார்ந்த, பேர் வெளியிட‌ விரும்பாத, செட்டியார் சமூகத்தைச்சார்ந்த‌ வாசகர் ஒருவர், நமது இளை.வெளிச்சத்திற்கு, 1972ம் வருடம் மார்ச் மாதம் 1ந் தேதி வெளியான "சிறு தொண்டன்" பத்திரிக்கையில் வெளிவந்த, நமதூர் ஜாஹிர் உசேன் கல்லூரி பற்றி செய்தியின், "பேப்பர் கட்டிங்கை" இணைத்து அனுப்பியுள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றி உரித்தாகுக! இதைபோல் நமதூரைபற்றிய பேப்பர் செய்திகளின் ஆதாரங்கள், வாசகர்களாகிய உங்களிடம் இருந்தால், வெளிச்சத்தில் வெளியிட அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.. இந்த பேப்பர் கட்டிங் மிகவும் பழமையாக உள்ளதால், அதில் உள்ள குறிப்புகளை எடுத்து கீழே தந்துள்ளோம்.
மஞ்சள் கலர் பெட்டியில்: இக்கல்லூரியை உருவாக்குவதற்க்கு முன்னால் மதுரைப் பல்கலை கழக துனை வேந்தர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் பெருமளவு உதவியாக இருந்தார். தென்கிழ்க்காசிய நடுகளில் சுற்றுப்பிரயானம் மேற்கொண்டிருந்த பொழுது, அந்த நாடுகளில் வசிக்கின்ற இளையான்குடி வணிகர்கள், தம்மை திரளாகச்சந்தித்து அக்கல்லூரி உருவாவதில் பெருமளவு அக்கறை காட்டியதைக்கண்டு தாம் உளம் நெகிழ்ந்த‌தாக திரு மீனாட்சி சுந்தரனார் தெரிவித்து உள்ளார்
பச்சை கலர் பெட்டியில்: திரு வி.எம். பீர்முஹம்மது இக்கல்லூரிக்கான தனிக்கட்டிடம் ஒன்றை தம் குடும்பத்தார் சார்பாக கட்டித்தந்துள்ளார்.

இது போல பல்வேறு கட்டிடங்களை கட்டிக்கொடுக்கும் பொறுப்பை பலர் தனித்தனியாய் ஏற்கக்கூடும் என்றும் தெரிகிறது. சிவகெங்கை முன்னால் மன்னர் கார்த்திகேய வெங்கடாசலபதி கல்லூரி விடுதிக்கான கட்டிடம் ஒன்றை கட்டிக்கொடுக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
சிவப்பு கலர் பெட்டியில் :இக்கல்லூரிக்கு பொதுவாக முஸ்லீம்கள் அளிக்க வேண்டிய ஆதரவை வற்புறுத்தி காயிதே மில்லத் அவர்கள் ஒரு வேண்டுகோள் கொடுத்துள்ளார்கள்.
கேப்டன் என்.ஏ. அமீர் அலி அவர்கள் முதல்வராக சிறப்பாக பனியாற்றுவது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியெல்லாம் ஊர் ஒன்றுபட்டு உருவாக்கிய ஒரு நிறுவனம், இன்றோ..பரிதாபம்

"---- கையில் கிடைத்த பூமாலை."ஆகிவிட்டது

நிர்வாகம்

Home

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடக்கம்.


இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தும் ,

அச்சமயம் அதை நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,

பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,

விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில்,



தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து

நன்றி பெருக்கால்

அச்சமயம் சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்து



ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக இனாமாக கொடுத்த இடத்தில் அடிக்கல் நாட்டி,





மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,



அந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌ யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து,



1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,



அல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.



இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர் (PRINCIPAL), பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து பணியிலமர்த்தி,



ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடங்கி செயல் பட செய்தார்கள்..



*************************


இன்றைய இளைய தலைமுறையினர் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள‌

க்ளிக் செய்து படிக்கவும். .

***மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது-- பயோ டேட்டா**

No comments: