Monday, July 27, 2009

1970 ல் டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரிக்கு நிதி வேன்டி கோரிக்கை விடுக்கிறார் ஓர் V.V.I.P.. அவர் யாரோ?


இளையான்குடி வட்டார,மக்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்று, எண்னத்தாலும், உதவியாலும், உழைப்பாலும், நில தானத்தாலும், கட்டிட நண்கொடையாலும், நல்ல பல ஆலோசனை வழங்கியதாலும், நிர்வாகத்தாலும் மேம்படுத்தியவர்கள் இளையான்குடியை சார்ந்த ஒரு சிலரே!

1970 ஜூன் மாத இறுதிக்குள், இளையான்குடியில் காலேஜ் தொடங்கப்பட வேண்டும், ஜூலை மாதம் முதல் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,என்று அரசாங்கம் நமக்கு கெடு விதித்த நிலயில், இல்லையெனில் கல்லூரி தொடங்கும் அரசு அங்கீகாரம் பரமக்குடிக்கு சென்றுவிடும், என்பதற்காக மிகத்துரிதமாகவும், துல்லியமாகவும் சிந்தித்து, வேலையை செய்தவர்கள் என்றால் அவர்கள் நால்வரே; (தகுந்த ஆதாரங்களுடன்) அதன்படி செய்தும் காட்டி விட்டார்கள். இப்பொழுது கல்லூரி தகவல் பலகையில் 50% தான் உண்மையை எழுதி உள்ளார்கள். இருவர் காழ்ப்புனர்ச்சி காரணமாக, நய வஞ்சகத்துடன் மறைக்கப்பட்டுள்ளார்கள்..

இதற்கும் மேலாக, நம் ஊரின் அப்பொழுது உள்ள இக்கட்டான நிலையை அறிந்து, நிதி வேண்டி ஒருவர் நமக்காக ஓங்கி குரலெழுப்புகிறார்..ஏன் காலேஜை குடும்ப சொத்தாக்கி கும்மியடிக்கவா!...

அந்த குரலெல்லாம் இப்பொழுது விழலுக்கு இரைத்த நீர் ஆயிற்றே...

குரலெழுப்புவது யார்?

கீழே 39 வருடங்களுக்கு முன் அடித்த நோட்டீஸ் சிறிது கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டும்


இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை பற்றி தெரியாமலிருக்கலாம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பிறந்த நாளை வருடாவருடம் தமிழக முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் சகல கட்சி தலைவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் பல்வேறு சமுதாய மக்களும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அன்னாரின் அடக்கத்தலத்தில் மரியாதை செலுத்தி வருவது நாம் யாவரும் அறிந்ததே..

இந்திய‌ அரசாங்க‌மும் இம்மாமனித‌ரை கண்ணிய‌ப்ப‌டுத்தி தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தி இருக்கிறது...


இம்மாமனிதர் இளையான்குடி டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரி தொடங்க மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள், மர்ஹூம் ஜனாப் P.N.I அபுதாலிப் அவர்கள் ஆகியோரின் அணுகுதலால் இளையான்குடி டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரிக்கு நிதி திரட்ட எடுத்த முயற்ச்சிகளும் கூட இன்னும் பல தவல்களும் வசதியாக மறந்து மறைககப்பட்டுள்ளது.


39 ஆண்டுகளுக்கு முன் 30.06.1970 அன்று இளையான்குடி டாக்டர். ஜாஹிர் உசேன் கல்லூரி தொடக்க விழாவிற்கு வருகை தந்து விழாவிற்குத் தலைமை தாங்கி, ஹாஜி V.M.பீர் முஹம்மது குடும்பத்தாரின் கட்டிடத்தைத் திறந்து வைத்தார். இந்தக் கட்டடத்தைக் கொண்டே இயங்கத் தொடங்கிய டாக்டர்.ஜாஹிர் உசேன் கல்லூரி, இன்று 39 வயதினைக் கடந்து நிற்பதோடு, பல்வேறு வளர்ச்சிகளையும் கண்டுள்ளது.
**************************


Home