இன்னும் இளையான்குடி பொது மக்கள் அறிந்தும் அறியாமல் வெளியில்
காட்டிக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கும், மறைத்து வைத்தது மறைந்தே இருக்கட்டும் என்றும், இன்று கல்லூரியில் பதவிக்கு வந்து விட்டால் ஒரு வழியாய் அவரவர் கணவு நிறைவேறிவிடும் என்ற மமதையில் இந்த உண்மையை மறைக்கப்பாடுபடும் நல்ல உள்ளங்களுக்கும், இப்படி கல்லூரிக்கு கொடுத்ததாக சொல்கிறார்களே! இது உண்மையா? என்ற சந்தேக கண்கொண்டு பார்ப்பவர்களுக்கும், குறிப்பாக இளை. இளைய சமுதாயத்தினருக்கும்
சமர்ப்பனம்..
Page 1 Page 2
Click to Enlarge
EC For Donated Land
கல்லூரிக்கு அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் அளித்த நில தான பத்திர நகலின் சாராம்சம்:
ரூ.3000.00 மதிப்புள்ள தான செட்டில் மெண்டு பத்திரம்
1970ம் வருஷம் ஏப்ரல் மீஉ 20உ இருபது தேதிக்கு சாதாரன வருசம் சித்திரை மீஉ 12 உ.
இளையாங்குடி கல்லூரிகழகத்திற்காக காலேஜ் சொசைட்டிக்காக சிவகங்கையிலிருக்கும் கிழக்கு ராமநாதபுரம் மாவட்ட பதிவகத்தில் S 64/1968 ம் எண்ணாக பதிவு செய்திருக்கிறபடி மேற்படி கழகத்தலைவரும் பிரதிநிதியுமான இளையாங்குடி டவுன் ஹவுத் அம்பலம் தெரு 9ம் என் உள்ள இடத்தில் வசிக்கும் ஜனாப் வி.காதர் அம்பலம் அவர்கள் குமாரர் வியாபாரம் விவசாயம் ஜனாப் V.K. இபுறாஹிம் அலி அம்பலம் அவர்களுக்கும் இனிமேல் மேற்படி ஸ்தானத்தை வகிப்பவர்களுக்கும் இளையாங்குடி டவுன் ஊரணிக்கரைத் தெரு 27 நிர் வீட்டில் வசிக்கும் வாஞ்சூர் முஹமது அவர்கள் குமாரர் விவசாயம் வியாபாரம் ஹாஜி V.M.பீர்முஹமது அவர்கள் எழுதிக்கொடுத்த தான செட்டில்மெண்டுப் பத்திரம். இளையான்குடி வட்டாரத்தில் மக்கள் கல்வி வளர்ச்சிக்குத்தேவையான கல்லூரி ஆரம்பிக்க வேனுமென்றும் நீடித்த காலமாய் எனக்கு இருந்த எண்ணத்தின்படி மேலேகண்ட கல்லூரிக்கு நிலம் தேவைப்படுவதாகத்தெரிந்து,மேற்படி பொதுக்காரியத்திற்காக தர்ம சிந்தனையாய் நான் 19.04.1970ல் ஆ.க.நாஹூர் கனி ராவுத்தருக்காக மேற்படியாரின் பவர் ஏஜண்டாகிய இளையாங்குடி ந.சி.ரா.அபுத்தாஹிர் அவர்களிடமிருந்து ரூ 2500.க்கு நான் கிரையபத்திரம் எழுதி ரிஜிஸ்தர் செய்து வாங்கிய மூலம் எனக்கு பாத்தியமான அனுபவமான தற்கால மதிப்பின்படி ரூ 3000 ரூபாய் மூவாயிரம் பெறுமானமுள்ள கீழ்கண்ட புஞ்சை நிலத்தை மேற்படி கல்லூரிக்கழகக் காரியத்துக்காக இந்த தான செட்டில்மெண்டு மூலமாக நான் பாத்தியப்படுத்தி வைத்து சொத்தின் சகல விதப் பொஷிஸன் வகையராவையும் மேற்படி கல்லூரிக்கழகத் தலைவர் முறையில் தங்களிடம் நான் ஒப்புவித்துவிட்டதால் தாங்களும் தங்கள் ஸ்தானங்களைப்பின் வகிப்பவர்களும் சர்வ சுதந்திரப் பாத்தியமாய் என்றென்றைக்கும் இஷ்டப்படி ஆண்டனுபோகம் செய்து கொள்ள வேண்டியது.
மேற்படி சொத்துக்குண்டான பட்டாவை மேற்படி கல்லூரியின் பெயரில் மாற்றுவதற்க்கு மேற்படி நமூனாவும் கொடுத்திருக்கிறது மேற்கண்ட என் பெயரிலுள்ள ரிஜிஸ்தர் கிரையப்பத்திரமும் இத்துடன் இருக்கத்தக்கது.
சொத்து விபரம்
கிழக்கு ராமநாதபுரம் ரிடி இளையாங்குடி சப்டி இளையாங்குடி துனைத்தாலுகா, இளையாங்குடிடவுன் பஞ்சாயத்து இளையாங்குடி கிராமம் தெற்கு வட்டத்தில்
இளையாங்குடி பரமக்குடி ரஸ்த்தாவுக்கும் கிழக்கு, சர்வே 212/2 நிர் கு.சி.ஜெயினுலாபுதீன் அம்பலமிடமிருந்து கல்லூரிக்கு ஏற்கனவே கிரையம் வாங்கிய புஞ்சைக்கும் தெற்கு, சர்வே 211/2 நிர் இ.அப்துல் ரஜாக்கு வகையராவிடமிருந்து மேற்படி கல்லூரிக்கு கிரையம் வாங்கிய புஞ்சைக்கும் மேற்கு,சர்வே 213 நிர் பொ.அ.ந.காதர் மீறா புஞ்சைக்கும் வடக்கு. இதற்குள்ளான 342 நிர் பட்டாவில் கண்டசர்வே 212/3 நிர் புஞ்சைத்தாக்கு 1க்கு ஏ.2 செண்டு 78 ஏக்கர் இரண்டு செண்ட் எழுபத்திஎட்டு இதற்கு 1.12.51.ஆர் மேற்படி நிலம் தற்கால மதிப்பு ரூ 3000 பெரும்.
Sd. V.M.PEER MOHAMED
சாஷிகள்:
1) A.M.Syed Ibrahim S/o A.E. Mohamed Ali. Ilayangudi..
2) முத்துவேல் பிள்ளை.ஹெட்மேன்.S/o. உருமனப்பிள்ளை அரியாண்டிபுரம்.
இது எழுதியது இளையாங்குடி முத்து ராக்கு பிள்ளை மகன் தெ.மு.நடராஜன் பிள்ளை
CLICK TO READ------>>> மேலும் படிக்க <<<----- CLICK
*************
No comments:
Post a Comment