நகரின் மத்தியில், பேரூராட்சி அலுவலகத்தின் எதிரில் உள்ள பழமை வாய்ந்த
"தெய்வ புஷ்ப கர ஊரணியின் அவல நிலை இது.
Click
4 வருடங்களுக்கு முன்னால் இந்த இடத்தில் யாரும் குப்பைகளை கொட்ட விடாமல், தனியார் ஒருவர், பக்காவாக வேலி அடைத்து இடத்தை சுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள்,இதனால் இந்த ரோடு மிகவும் விசாலமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது, இதைக்கண்டு வழிப்போக்கர்கள் பாராட்டினார்கள்.
ஆனால் பேரூராட்சி நிர்வாகம்,ஊரணிக்கரையில் நான்கு பக்கமும் "பூங்கா" வைக்க போகிறோம் என்று அறிவித்து "பொக்லைன்" எந்திரம் மூலம் பக்காவான வேலிகளையெல்லாம் பெயர்த்து எடுத்து விட்டார்கள்.
இன்றுவரை 'பூங்கா' வரவில்லை, மாறாக குப்பைகளில் இருந்து 'தேள், நட்டுவாக்கிளி' போன்ற விஷ ஜந்துக்கள் தெருக்களில் ஓடி அலைகின்றன. மக்கள் தலை குனிந்து, மண் பார்த்து, விச ஜந்துக்களுக்கு பயந்து நடக்கிறார்கள்.
இவ்வூரணியின் ஒருகரையில் INPT பள்ளிவாசலும், அடுத்த கரையில் சிவன் கோவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது
ஊரணியின் கரையில் உள்ள முட் புதர்களில்தான் ஒரு சில இளைஞர்கள் "போதை வஸ்த்துக்கள்" பயன் படுத்த இந்த புதர்கள் புகலிடம் அளிக்கின்றன.
இது இத்தெருவில் வசிக்கும் மக்களின் புலம்பல்.
இதை இந்த வார்டு கவுன்சிலரும், நிர்வாகமும் சிரத்தையெடுத்து கவனித்தால்..
யாவருக்கும் நலமே..
No comments:
Post a Comment