கடந்த 10/08/2008ல் Dr.ஜாஹிர் உசேன் கல்லூரி கழகம் நிர்வாக குழுவிற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, கல்லூரி கழகத்தின் உப விதிகளின் (By-Law) படி தேர்தல் அறிவிக்கப்படவில்லை, விதிகள் மீறப்பட்டுள்ளன என்ற காரணத்தின் அடிப்படையில் நிர்வாக குழு தேர்தலுக்கு “இடைக்கால தடை” உத்தரவு இளை.கோர்ட்டில் வாங்கப்பட்டது.
ஆனால் 10/08/2008 லே தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரின் ஒரு சில பேர்களின் (முன்னால் கல்லூரி செயலர் உட்பட) முயற்சியால், இருசாராரும் ஒப்புதலின்படி, இளையான்குடி கோர்ட் மூலமாக, ஒரு சமாதான உடன்படிக்கை
ஏற்படுத்தப்பட்டு, தடைஉத்தரவு வாபஸ் பெற பட்டது.
10/08/2008 அன்று தேர்தல் நடைபெற்று, ஒரு அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினர் கோர்ட்டில் முடிவு செய்த படி, சமாதான உடன்படிக்கையை அமல்படுத்தவில்லை, இதன் காரணமாய் மீண்டும் இதே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, நடந்து வந்தது, இன்று(25/01/2011), இளை.ஜூடிஸியல் மாஜிஸ்திரேட் மேதகு நீதியரசர் மஹேந்திர பூபதி அவர்களால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
****************
எல்லாப்புகழும் இறைவனுக்கே!,
ஆதாரம் : தீர்ப்புரை நகல்
No comments:
Post a Comment