அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஐ.என்.பி.டி.பள்ளிவாசல் நிர்வாகம், தனது சொந்த ஜமாத்தார்கள் நிர்வாகத்திற்கு வந்து விட்டதாக அறிய வருகிறோம் அல்லவா? புதிய நிர்வாகத்திற்கு
"வாழ்த்துக்கள்" உரித்தாகுக.
ஐ.என்.பி.நிர்வாகம் தனது முதல் பொதுக்குழு கூட்டத்தை வரும் 18/11/2010 வியாழக்கிழமை அன்று காலை 10.30.மணிக்கு நடைபெற இருப்பதால், ஐ.என்.பி ஜமாத்தார்கள் யாவரும் கலந்து கொள்ளும்படி நிர்வாகம், பள்ளியின் அறிவிப்பு பலகையில் தெரிவித்து உள்ளது.
புதிய நிர்வாகம் தன்னுடைய பணியை செவ்வனே ஆரம்பம் செய்ய சில மாதங்கள் ஆகலாம், புதிய பொறுப்புக்கு வந்துள்ளவர்களுக்கு கண்டிப்பாக கால அவகாசம் தேவைதான்.
புதிய நிர்வாகத்திற்கு நமது ஜமாத்தார்களின் வேண்டுகோளாக சில கருத்துக்களை முன் வைக்கிறோம்..
ஐ.என்.பி.புதிய நிர்வாகம் கடந்த கால(வாரியத்தின் பொறுப்பில் இருந்த காலம்) வரவு, சிலவு கணக்குகளை முறையாக, பெற வேண்டுகிறோம்.
வாரியம், முந்தைய நிர்வாகத்திடம் தெரிவித்துள்ள 9 குற்றச்சாட்டுக்கும், வாரியத்திடம் விளக்கமளித்தும், புதிய பள்ளிவாசல் கட்டிய கணக்குகளை ஒப்படைத்தும், மற்ற காரணகேட்பீது வினாக்களுக்கு தெளிவுரை அளித்தும், வாரியத்துடன் சுமூக உறவு கொள்ளவும் வேண்டுகிறோம்.
நிர்வாகம் ஐ.என்.பி ஜமாத்துக்குச் சொந்தமான சொத்து விபரங்களை துல்லியமாக கணக்கெடுத்தும், வாடகைக்கு விட்டிருக்கும் கடைகள், வீடுகள் யாவற்றுக்கும் தற்கால மதிப்புபடி வாடகை உயர்வு செய்து, வாடகை நிலுவை இல்லாமல் வசூல் செய்து பள்ளியின் வருமானத்தை உயர்த்தவும் வேண்டுகிறோம்.
ஐ.என்.பி.டி மெட்ரிகுலேசன் ஸ்கூல் நிர்வாகம், பள்ளியின் ஷரத்துப்படி, ஐ.என்.பி.டி ட்ரஸ்டியே பள்ளிக்கூடத்தின் தாளாளர் ஆவார் என்பதை உறுதிப்படுத்தியும், தற்கால ஐ.என்.பி.டி மெட்ரிகுலேசன் ஸ்கூல் நிர்வாகப் பொருப்பை "கைப்பற்றி" புதிய நிர்வாகம் திறம்பட செயல்படுத்த வேண்டுகிறோம்
ஐ.என்.பி ஜமாத்துக்குச் சொந்தமான சொத்துக்களை, தனியார் வாடகைக்கு எடுத்து வாடகைதாரரே தன் சொந்த இடம் என உரிமை கொண்டாடி, சொத்தை 5 வருடம்,10 வருடம் லீசுக்கு விட்டு சம்பாரிப்பதை "தடுத்து நிறுத்தி" சாதனை படைக்க வேண்டுகிறோம்.
ஐ.என்.பி.டி மெட்ரிகுலேசன் ஸ்கூலில், கட்டிட தானம் செய்தவர்களை கண்ணியப்படுத்தவும், ஸ்கூல் ஆரம்பிக்க முயன்றவர்களின் பெயர்களையும் தெரிவிக்கும் காழ்ப்புணர்ச்சியுடன் அகற்றப்பட்ட கல் வெட்டுக்களை மறுபடியும் அதே இடத்தில் பதித்து கண்ணியவான்களை கண்ணியப்படுத்த வேண்டுகிறோம்..
ஐ.என்.பி.டி.பள்ளிவாசல் புதிய நிர்வாகம், ஜமாத்தார்களிடம் சொந்த குரோதம், தனி மனித விருப்பு வெருப்பு காட்டாமல், நான், நீ பெரியவன் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்ற போட்டியில்லாமல், ஜமாத்தார்களிடம் 'ஈகோ" பார்க்காமல் ஐ.என்.பி.ஜமாத்தார்களிடையே முழு ஒற்றுமையை வளர்க்க வேனுமாய் வேண்டுகிறோம்...
ஐ.என்.பி.டி.பள்ளிவாசல் வளர்ச்சியில் அன்றும், இன்றும், என்றும் பங்கு பெறும் ஜமாத்தினர்கள்.
No comments:
Post a Comment