Monday, December 7, 2009

"கண், காதுகளை பொத்திக்கொள்ளுங்கள்".-"அதிகார" ily.org.

click to Read

UPDATED ON 10.12.2009

அல்ஹாஜ் வாஞ்ஜூர் முஹமதலி ஜின்னா. அவர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றது. பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.


"கண்களையும் காதுகளையும் பொத்திக்கொள்ளுங்கள்".


"அதிகார" இளையாங்குடி இணைய தளமான ilyangudi.org இணைய‌தளம்..


ilyangudi.org இணையதளத்தின் மூலமாக‌ பெரும்பாலான புலம் பெயர்ந்த (குறிப்பாக வளைகுடா நாடுகள் ) இளையாங்குடியர்களுக்கு,
திருமணம் , மரணம் , விழாக்கள், உள்ளூர் செய்திகள் என்ற பெயரில் தினசரிகளில் வெளியானவைகள்

மற்றும் ஜூனியர் விகடனில் பிரசுரிக்கப்படும் அரசியல் நையாண்டி அக்கப்போர் ஆகியவற்றையும் மட்டுமே
பிரதானமாய் அளிக்க பெரும் பாடு பட்டுக்கொண்டு

மேலும் ilyangudi.org யில் பேட்டி என்ற போர்வையில் சில ஊர் "போலி' களை இவரை போல் நல்லோர் உண்டோ? என புலம் புலர்ந்த வாசகர்களின் உள்ள‌ங்களில் பதிய செய்யும் சாதனையை ily. org செவ்வனே செய்து வந்து கொண்டிருக்கின்றது என்ப‌து ப‌ல வாச‌க‌ர்க‌ளின் க‌ருத்தாகும்..

இளையாங்குடியின் நடக்கும் அராஜகங்கள், ஊழல்கள், அநியாயங்களை அறிந்திருந்தும் பார்த்துக் கொண்டிருந்தும்

ilyangudi.org பெரும்பாலான ஊர் வசூலில் கணிசமாக தங்கள் இரத்தமும் வேர்வையையும் சிந்தி சம்பாரித்த பணத்தை கொடுத்த கொடுத்து வருகின்ற புலம் பெயர்ந்தோர்களெல்லாம் எவ்வாறெல்லாம் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் ஏமாற்றப்பட்டு வருகின்றோம் என்று அறியத் தர வேண்டிய தார்மீக கடமையை மறுத்து மறந்து "கைக்கூலி" யோ என எண்ணச் செய்யும் வகையில் செயல் பட்டு வருகின்றது என்ப‌து ப‌ல வாச‌க‌ர்க‌ளின் க‌ருத்தாகும்.. .

இளையாங்குடியின் நடக்கும் அராஜகங்கள், ஊழல்கள், அநியாயங்களை ஆதாரப்பூர்வமாக தஸ்தாவேஜுகளுடன் இவைகளில் பெரும்பகுதி உள்ளூர் வாசிகளுக்கே தெரியாதிருந்து "இளயாங்குடியின் வெளிச்சம் " தளத்தின் மூலமாக உண்மைகளை தெரிந்து அதிர்ச்சிக்குள்ளாகின்றார்கள்.

இத்தளமான "இளயாங்குடியின் வெளிச்சம் " த்திலிருந்து ஆதாரப்பூர்வமாக தஸ்தாவேஜுகளுடன் பதிக்கப்பட்ட பதிவுகளின் லின்க் களை ilyangudi.org ல் இணைப்பதன் மூலம் அனைவரும் மறைக்கப்பட்ட மறைக்கப்படும் உண்மைகளை ஆதார‌ப் பூர்வமாக‌ தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில்
ilyangudi. org ல் லிங்க் கொடுத்தேன்.

அதற்கு தளம் இந்த
http://www.ilayangudi.org/ily/page.php?92 லின்க்கில் கீழ்க்கண்டவாறு தன்னுடைய கோள்கையை அறிவித்து இருக்கிறது.

1. இளையான்குடி தொடர்புடைய மற்ற இணையதளங்களின் இணைப்பு(லிங்க்)களுடன் பதிவு செய்யப்படும் பகுதிகள் அனுமதிக்கப்பட மாட்டாது.

அதாவது தன் தளத்திலன்றி மற்ற இளையாங்குடி சார்ந்த தளங்களின் மூலம் எதையும் ( உண்மைகளை ) வாசகர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதில் எவ்வளவு முனைப்பாக உள்ளது என்பது தெளிவாகிறது.என்னே ily.org யின் நடுநிலை?

வெளிச்சத்தை மறைக்க முய‌ல்வது.... ?

************
2. இளையான்குடி தொடர்பில்லாத மற்ற இணையதளங்களின் இணைப்பு(லிங்க்)களுடன் ஏதேனும் கருத்துக்களோ, கட்டுரைகளோ பதிவு செய்யப்பட்டால், அவற்றின் அவசியம் அறிந்தே அவை இந்த இணையத்தில் தொடர்ந்து இடம்பெற அனுமதிக்கப்படும்.

மற்ற இணையதளங்களின் இணைப்பு(லிங்க்)களுடன் O.K. யாம்.
இது தளத்தினரின் அறிவு சார்ந்த அருமையான முடிவு தானே?

கண்களை காதுகளை வாயை மூடி இருக்கும் "மூன்று குரங்குகள் பொம்மை " களை கடைகளில் காணலாம். இவைகள் ஒரு நீதியை வெளிப்படுத்துகின்றன.

Ilyangudi org யின் "கண்களையும் காதுகளையும் பொத்திக்கொள்ளுங்கள்". முடிவுகள் எதை நிலை நாட்டுகிறது?

வாசகர்களுக்கு தெரிகிறதா?

வாஞ்ஜூர் முஹமதலி ஜின்னா.
*********************

நன்றி கெட்ட ILAYANGUDI.ORG நிர்வாகமே. திரும்பிப்பார்.


POSTED TO ILAYANGUDI.ORG .WHICH WAS HIDDEN BY ILYANGUDI.ORG

Posted by
Vanjoor on Tue Dec 08 2009, 05:03PM

தனி ஒரு வாசகனுக்கு லின்க் குகள் இணைப்பது பிடிக்கவில்லை. அது ஏன் என்றும் தானே வாச‌க‌ன் இவ்வாறு
-link- பதிந்து இருப்பதில் வாச‌க‌ன் கூறும் காரணத்தைதை படித்து ஏன் நிர்வாகம் உணர முடியவில்லை?

---------------------------------
ilayngudi.org யில் கனி என்றொரு ...... வாசகன் பதிப்பித்தது
Posted by ghani on Wed Dec 02 2009, 06:55PM
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அமைதியாக சென்று கொண்டு இருக்கும் இந்த இணையதளத்தில் மீண்டும் இணைப்பு இணைப்பு என எழுதி விவாதங்கள் வரவேண்டாம்
ஏனெனில், இளையான்குடியான் யாகூகுரூப்பில் அமைதியான முறையில் கருத்துபரிமாற்றம் செய்துகொண்டு இருந்த என்னை ஆரிப் முஹம்மது-முஹம்மது ஆரிப் என்ற பெயரில் அநியாயமாக எழுதியபொழுது இளையான்குடி வெளிச்சத்தில் அந்த நபர் யார் என்று வெளிச்சம் போட்டுக்காட்டவில்லை. அவர் அநியாயமாக எழுதியதை கண்டிக்கவில்லை.

மேல் சொல்லப்பட்ட கார‌ணத்தினால் இளையான்குடியின் வெளிச்சம் என்றாலே தன்னுடலின் ஒன்பது வாசல்களும் அடைத்துக்கொள்கிறது என்று சுயமாக வாச‌கன் ஒப்புக்கொண்டு அதனால் தான் இளையான்குடியின் வெளிச்சத்தின் லின்க்குகள் இருக்கக்கூடாது என்பதை கவணியுங்கள்.
------------------
இணைப்புக‌ளை த‌டை செய்ய‌ வேண்டும் என்று மேற்க‌ண்ட வாசகன் கூறிய‌தை ilyangudi.org நிர்வாக‌ம் ஒரே ஒரு நபரை கொண்டு தனி நபர் சட்ட‌ச‌பையை கூட்டி வாச‌க‌னின் மானம் காக்க‌ த‌விர்க்க முடியாத‌ நியாய‌மான கோரிக்கையாக‌ ஏற்று அங்கீக‌ரித்து த‌ள நிர்வாக‌த்தின் ஒருதலை ஒரு ம‌ன‌தாக‌ நிறைவேற்றிய‌து.
தனி ஒருவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதற்காக ஒட்டு மொத்த வாசகர்களின் கண்களையும் காதுகளையும் கட்ட முய‌லுவது ஏன்?ஒட்டு மொத்த வாசகர்களின் அவயவங்களும் மூளைகளும் ilayangudi.org யின் கட்டுக்குள்ளிருக்கிறதா?
த‌னி ஒருவ‌ன் தான் யாரிடமோ எதையோ கொடுத்து எதோ புண்பட்டதற்காக இணைப்புகளின் மூலம் உண்மைகளை லின்க் களை தடை செய்ய பதற வேண்டும்?.
சரி அந்த‌ லின்க் க‌ளின் மூல‌மாக‌ அறிய‌த் தந்த விச‌ய‌ங்க‌ள் உண்மையா? இல்லையா?
வ‌ழக்க‌ம் போல் தினம‌ல‌ர் , தின‌த்த‌ந்தி , ஜூனிய‌ர் விக‌ட‌ன் ஆகிய‌வ‌ற்றிலிருந்து காப்பி எடுக்காம‌ல் அந்த‌ இளயாங்குடியின் வெளிச்ச தளத்திலிருந்து லின்க்குக‌ள் மூல‌ம் அறிய‌ப்ப‌ட்ட‌ ஆதார‌ங்க‌ளை அடிப்ப‌டையாக கொண்டு தானே ilyangudi.org சில ஐ.என்.பி., கல்லூரி செய்திக‌ளை வெளியிட்ட‌து. இது உண்மையா? பொய்யா?
முறையாக பதில் அளிக்காமல் வாசகர்களை திசை திருப்ப வேண்டாம்.
------------------------------------
மேற்கண்ட அனைத்தையும் Ilayangudi.org யின் " வாசகர் பதிப்பு " பகுதியிலும் இந்த COMMENTS லும் பதிந்தவுடன் இரண்டும் உடனே நீக்கப்பட்டு விட்டது.
. கெட்டிகாரங்களுனுக‌.

வாஞ்ஜூர் முஹமதலி ஜின்னா.

====================================================
Ilayangudi.org யின் கேள்வி வினா இதுதான்: இளையான்குடி தொடர்புடைய பிற இணையதளங்களிலிருந்து அவ்வப்போது பல நபர்களுக்கு இமெயில்கள் அனுப்பப்படுகின்றன அவை எங்களது தனிப்பட்ட சொந்த இமெயில் முகவரிக்கும் வருகின்றன.

எங்கிருந்து இந்த இமெயில் முகவரிகள் யாவும் எடுக்கப்பட்டன என்பதனை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

பதில் தெரிந்தால், சுற்றி வளைக்காமல் நேரடியாகவே சொல்வீர்கள் என நம்புகிறோம்.
====================================
பதில் ;

Ilayangudi.org மழலையாக வாயில் விரலை சூப்பிக்கொண்டிருந்ததை தவழ்க்க செய்து நிமிர்ந்து நடக்க செய்தது யார் என்பது மறந்து விட்டதோ ?

Ilayangudi.org ஆரம்ப கால கட்டத்தில் மெம்பர்கள் இல்லாது புழம்பிய கால‌ கட்டத்தில் Ilayangudi.org க்கு அதாவது Ilayangudi.ஒர்க் நிர்வாகத்திற்கு எந்த கணவான் யார் இளையாங்குடியர்களின் இ மெயில்களை தந்தாரோ அவர் பெயரை Ilayangudi.org வெளியிட முடியுமா?

அந்த கணவான் இ மெயில்களை Ilayangudi.org க்கு தந்தது மட்டுமல்லாமல் நவரசமான கட்டுரைகள் மூலமாகவும் , சாட்டிலும் , கமெண்ட்ஸ்களிலும் Ilayangudi.org தளத்திற்கு உயிரூட்டம் அளித்ததையும் ,

அக்கணவானின் சேவை ilayangudi.org க்கு தேவை என வாசகர்கள் குறிப்பிட்டதையும்

அந்த கணவான் த‌ன் சொந்த‌ சில‌வில் த‌னக்கு தெரிந்த‌ உல‌க‌ வாழ் புல‌ம் பெய‌ர்ந்து வாழும் இளையாங்குடிய‌ர்க‌ளை தொட‌ர்பு கொண்டு Ilayangudi.org மெம்ப‌ராக‌ சேர‌ சொல்லியும் , அவ‌ர‌வர்க‌ளுக்கு தெரிந்த‌ மற்ற‌ இளையாங்குடிய‌ர்க‌ளுக்கும் அறிவிக்க‌ சொல்லி தொட‌ர்பு கொண்டு Ilayangudi.org க்கு மெம்பர்க‌ள் சேக‌ரித்ததையும்

அவர் சொந்த செலவில் Ilayangudi.org நிர்வாகத்தால் நெருங்கவே முடியாத உலகம் போற்றும் பெரிய மனிதரை பேட்டி கண்டு Ilayangudi.org ல் பதிப்பிக்க செய்ததையும்

இடப்புறம்,நடுப்புறம்,வலப்புறமாக Ilayangudi.org யின் முதல் பக்கம் பூராவுமே அதே கணவானின் பெய‌ரே மிக‌வாக‌ தோன்றிய‌தை காண‌ ம‌னம் பொறாது அந்த‌ க‌ணவானிட‌ம் " மாமா, உங்க‌ள் ப‌திவுக‌ளை ஒரு தியாகமாக உங்கள் பெய‌ரில்லாது ப‌திக்க‌லாமே" என‌ நிர்வாக‌ம் திர‌ண்டு போய் கோரிக்கை விடுத்த‌தும் .....

Ilayangudi.org துட‌க்க‌ கால‌த்திலிருந்து அன்றாட‌ம் அதை க‌ண்காணித்து உட‌னுக்குட‌ன் த‌வறுக‌ளை க‌ளைய‌ செய்து ஒழுங்கு ப‌டுத்தி Ilayangudi.org யை வ‌ள‌ர‌ செய்தும், ……………

இன்னும் உள்ள‌ன‌.

நல்ல‌ மாட்டுக்கு ஒரு சூடு போதுமென்பார்க‌ள் பெரியோர்.

இப்ப‌டியா நன்றி ம‌றந்து மறுக்கும் நிலையில்
தீட்டிய மரத்திலேயா கூர் பார்ப்பது?
பால் குடித்த மார்பையா பிடித்து பார்ப்பது?

ப‌ண‌ம் போட்டு ஸ்தாபித்த‌வர்க‌ளையும் வளர்த்து விட்டவரையும் உதாசீனப்படுத்தும் Ilayangudi.org நிர்வாக‌மே


திரும்பிப்பார்.

5 comments:

நெய்னா முஹம்மது said...

அன்புள்ள நேயர்களுக்கு

நம் ஊருக்கு என்று ஓர் இணையதளம் வேண்டும் என்று எண்ணி 4 ஆண்டுகளுக்கு முன், இணையதள பெயர் மற்றும் டேட்டாபேஸ் வாங்க அதிக செலவாகும் காலகட்டத்தில் சிங்கப்பூர் வாழ் மக்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியது தான் இளையான்குடி இணையதளமான (ilayangudi.org).
அது ஃபெரோஸ் கான் அவர்களின் முடிவால் இரண்டு பேரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவ்விருவரும் வளர்த்த கடா தன் கடமையை செய்தது போல் செயல்பட்டு, தன்னிச்சையாக 2 வருடங்களாக செயல்படுகிறார்கள். ஃபெரோஸ் கான் அவர்களாளும் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதற்கு பணம் கொடுத்தவர்களோ மனம் புழுங்கினர்.

இன்று வரை இளையான்குடி மக்கள் மத்தியில் ஏதோ அந்த இருவரும் தன் சொந்த செலவில் ஆரம்பித்ததைப் போன்ற தோற்றத்தை கொடுத்துவிட்டது இவர்களின் முழுவெற்றியாகும்.

இவ்வாறு இருக்கும் போது இளையான்குடியில் நடைபெறும் முறைகேடுகளை தட்டிக்கேட்பதற்கு முடியாது தான்.


முதலில் இந்த இணையதளம் நிறுவியதற்கு உதவியவர்கள் முன்வந்து அவர்களது முடிவின் பெயரில்தான் இது இயங்க வேண்டும். இல்லையென்றால், பள்ளிக்கூடம், கல்லூரி, பள்ளிவாசல் வரிசையில் இளையான்குடி. ஓர்க்-ம் சேர்ந்துவிடும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கேற்ப, ஊர் சொத்தை அனுபவிப்பதற்கென்றே பிறந்தவர்களா இளையான்குடியான்கள் என்ற பிம்பம் உருவாகிவிடும்.

இந்த கமெண்டை பார்த்தாவது திருந்துவார்களா?

நெய்னா முஹம்மது
இளையாங்குடி.

இளையாங்குடியான். said...

யார் சொத்து…?

இளையான்குடி சர்க்கிள் இணையதளத்தில் ஜனநாயம் என்பது கிடையாது. இருவர் கூறுவதுதான் சட்டம். ஸ்போக்ஸ் பெர்ஸன்களும் இளையான்குடி சர்க்கிள் இணையதளத்தினைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று இளையான்குடி சர்க்கிள் இணையதளத்தின் நிர்வாகிகளே கூறிவிட்டனர்.

ஆனால் இளையான்குடி சர்க்கிள் இணையதளத்திற்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மட்டுமே இவர்கள் "ஸ்பீக்கிங்" பெர்சன்களாகவே உள்ளனர். இதனை ஏன் கோடிட்டு காட்டுகிறோம் என்றால், இளையான்குடி குரலை போன்று இளையான்குடி சர்க்கிள் இணையதளம் தனியாருக்குச் சொந்தம் இல்லை.

2006 – ல் சிங்கப்பூரில் வாழும் கிட்டதட்ட அனைத்து இளையான்குடியினர் பணம் போட்டு ஹாஜி ஃபெரோஸ் கான் அவர்களின் 8 திட்டங்களில் ஒன்றுதான் இளையான்குடி சர்க்கிள் இணையதளம்.

பொதுவான ஒரு இணையதளம் இன்று தனியாருக்குச் சொந்தம்போல் அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இணையதளத்திற்கு பணஉதவி செய்து ஆரம்பித்தவர்கள்

ஹாஜி ஃபெரோஸ் கான்
ஜனாப் ஜலீல் கான்
ஜனாப் முஜிபுல்லா
ஜனாப் அலி சபூர்
ஜனாப் சாகுல் ஹமீது
ஜனாப் நூருள் அமீன்
ஜனாப் இக்பால்
ஜனாப் ரியாஸ்
ஹாஜி ரஹீம்
ஜனாப் ஹசன்

இருவரைத் தவிர மற்றவர்கள் (பணம் கொடுத்தவர்களே) அன்னியனாக இளையான்குடி சர்க்கிள் பார்ப்பது வேதனைக்குரிய விசயம்.

சிங்கப்பூர் வாழ் இளையாங்குடியான்.

Anonymous said...

ilayangudi.org only publishing the news and articals.Now days in ilayangudi so many public problems are there, thay are not publishing the real fact of problems. For them this for just time pass and getting grace from ilayangudi people. There is no social political responce for them thay have to change

Anonymous said...

இளையான்குடியின் வெளிச்சம் என்ற பெயரில் வெளியாகும் இந்த இனையதளம் எல்லா ஊழல்களையும் வெளிப்படுத்துகின்றன..மற்றவர்கள் என்ன யோக்கியமானவர்களா? இளையான்குடியில் நடக்கும் சிறிய சிறிய விசயங்களை எல்லாம் புலனாய்வு செய்து,ஊரின் ஊழலை வெளிக்கொண்டுவந்து துணிந்து விட்ட வெளிச்சமே! வாழ்க!

MOHAMED RASHID MAKTHOUM,
UNITED ARAB EMIRATES

Anonymous said...

Hallo,Ilayangudiyinvellicham எல்லாரும் எல்லாத்தையும் பற்றி கருத்து சொல்கிறிர்களே சாலை ஷபிஜமாத்/சாலை ஹனபி ஜமாத்/புதுர்ர்ஜமாத்/இளையான்குடி மேலப்பள்ளி ஜமாத்தில் இதுபோன்ற நிர்வாக பிரச்சனைகள் ஊழல் மற்றும் தவறுகள் இல்லாமலா இறுக்கிறது இதைப்பற்றி எல்லாம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட முயற்ச்சி செய்யுங்கள்..இவைகளைப்பற்றி எங்களிடம் உள்ள ஆதாரங்களை அன்ப்ப்லாமா? இனையத்தளத்தில் வெளியிடுவிர்கலா
Please tell me