Thursday, July 16, 2009

ஒர் பள்ளிக் கூடத்தின் புலம்பல்

இன்று எல்லோரும் என்னைப்பற்றியே பேசுகிறீர்கள்?!

பாதிக்கப்பட்ட என்னிடம் விளக்கம் கேட்டீர்களா?

என்னுடைய தன்னிலை அறிக்கை பாரீர்.....

1973 ம் ஆண்டில் அப்போதைய மானேஜிங் ட்ரஸ்டியால் "கரு" உருவாகி, எலிமெண்டரி ஸ்கூல் ஆக கருத்தரித்தேன் (அன்றைய காலக்கட்டத்திலேயே எனக்காக ஒரு கனவான் ரூ35000/ தருகிறாராம். இன்றைய மதிப்பு 3 கோடிக்கு சமமாகும்..) பார்க்க:=

Click on this page


அதற்குப்பின் பல வருடங்கள், கருவரையில் பூட்டப்பட்டு கிடந்த நான், 20 ஆண்டுகளுக்கு பிறகு 1993 ல் மீண்டும் புத்துயிர் பெற்று

ஜனாப் பண்டுவன் P.H.A. மஜீது அவர்கள் காலத்தில், ஆசிரியர் ஷேக்கோ அவர்களின் முயற்சியாலும் சட்ட, திட்டங்கள் மற்றும் மதிப்பீடு ஆகியவை உருவாக்கப்பட்டு,

நிதி ஆதரத்திற்க்காக வாவணன் டாக்டர் சுல்த்தான் அஹமது.U.S.A அவர்களிடம் உதவி பெற்று, பள்ளி தொடங்குவதற்கான ஆயத்த வேலையில் ஈடுபடும் போது ட்ரஸ்டி அப்துல் மஜீது அவர்கள் 'மவுத்'ஆகி விட்டார்கள். பார்க்க

ஆசிரியர் ஷேக்கோ அவர்கள் வெளியிட்ட "நோட்டீஸ்" ன் ஒரு பகுதி click on this page

எனக்கு வந்த சோதனையை பாருங்கள்..

ஆசிரியர் ஷேக்கோ அவர்கள் ட்ர‌ஸ்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, என்னை உருவாக்குகிறார்கள்.

தென்மலைக்கான் மதுரகவி பாட்சா புலவர் மதரஸாவில் INPT பள்ளி தொடங்கப்பட்டது. அரசு அங்கீகாரத்துடன்.

1996 பிப்ரவரி முதல் அல்ஹாஜ் K.M.A.. முஹைதீன் காதர் ட்ரஸ்டியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின், அரசு அங்கீகாரம் புதுபிக்கப்பட்டும்,

1999 வரை அரபி மதரஸாவில் நடைபெற்று வந்த ஸ்கூல், INP சொந்த இடத்தில், டாக்டர் வாவணன் சுல்த்தான் அஹமத U.S.A.
அவர்கள் கட்டிய கட்டிடத்திற்கு மாறியது.

பிறகு ட்ரஸ்டி முஹைதீன் காதர் முயற்ச்சியால் ,2000 ல் ஜனாப் T.S.T..கஸ்னவி அவர்கள் தன்னுடய‌ தக‌ப்பனார் நினைவாக கட்டிய கட்டிடமும் இனைந்து கொண்டது..

இவர்கள் காலத்தில்தான் பள்ளிக்கூடம் முழுமையாக நிறைவு பெற்று, அன்றைய மொத்த மாணவர்கள் 450 ஆகும்.

29/07/2001 ம் ஆன்டு 10 ம் வகுப்புவரை நடத்த அனுமதி வாங்கியும், அங்கீகாரம் புதுப்பித்து ம் 2004 வரை அனுமதி வாங்கி உள்ளார்கள்..

நானும் நல்ல பள்ளிக்கூடம் என்று பெயரெடுத்து , சிறந்து விளங்கினேன்...

08/08/2002 முதல் 11/08/2002 வரை ஜனாப் கலிபா இஸ்மாயில் அவர்களும்,ஜனாப் S.S. .முஹமது பாருக்கும் 3 நாடகள்
மட்டும் தலைமை பதவி ஏற்றார்கள்..

11/08/02 முதல் 31/10/02 வரை 5 பேர் கொண்ட குழு (1.கலிபா இஸ்மாயில் .2 S.S.. முஹமது பாருக், 3.A.A..முஹமது சுபையர் 4.T.M.O. துல்கருனை. 5 Pea. அப்துல் கறீம்.) நிர்வாகத்திலும்,

01/11/02 முதல் 07/07/2003 வரை ஜனாப் ஆசிரியர் காதர் மீரான் அவர்கள், நிர்வாகத்திலும்,

15/07/03 முதல் 2005 வரை ஜனாப் S.S.முஹமது பாருக் நிர்வாகத்திலும் நடந்து வந்தது.

இனிமேல் தான் நான் எடுப்பார் கைப்பிள்ளையாக, சிக்கி சிதறி.தவித்து வந்த காலம் 2005 முதல் 03/02/09 வரை.

2005 முதல் ஜனாப் S.S. முஹமது பாருக் தாளாராகவும், ஜனாப் A.A. முஹமது சுபையர் ஆக்டிங் தாளாளராகவும் செயல் பட்டு வந்த நேரத்தில் கடந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 306 ஆக இருந்தன.

31/03/2004 ன் ஆண்டறிக்கையில் ரூபாய் 18,000/=ம்
31/03/2005 ன் ஆண்டறிக்கைப்படி ரூபாய் 20,000/ம், 31/03/2006 ன் ஆண்டறிக்கையின் படி ரூபாய் 400/ம் ஆடிட்டர் V.மலையப்பன் ஆண்டறிக்கையில் 'TO Recognition Exp' என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

மெட்ரிக் பள்ளிக்கு வருடாவருடமாய் புதுப்பிக்க வேண்டும்??? அறிந்தவர்கள் கூறுவார்களா? அப்படியானால் இந்த சிலவு யாருக்காக???

2006 ல் இருந்து அரசு அங்கீகாரம் எனக்கு வாங்கவில்லையாம், கூறுகிறார்கள் அரசு அதிகாரிகள், நான் என்ன செய்வேன்?? யார் என்னைக்காப்பற்றுவது?

என்னை கருவாக்கிய V.M..பீர்முஹமது, உருவாக்கிய P.H.A.மஜீது, செயல்படுத்திய K.M.A.. மைதீன் காதர் இவர்களெல்லாம் இப்பொழுது இல்லையே!!!

உருவாக்கிய ஆசிரியர் ஷேக்கோ அவர்களும்,முதுமையின் காரனமாக,ஓய்வெடுத்து கொண்டிருக்கிறார்கள்
இதைப்படிக்கும் நல்லோர்கள் யாரேனும் எனக்காக ஏக வல்ல இறையோனிடம் மன்றாடுவார்களா?

நம்பிக்கையுடன் ஏங்கும் INPT மெட்ரிகுலேசன் பள்ளி

நிர்வாகம்

Home

1 comment:

ilayangudi may know said...

take immediate acion with inpt for student future