Tuesday, May 5, 2009

யார் குற்றம் ???

நமதூர்,டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியின் நிர்வாகத்தைப்பற்றி  "  http://www.ilayangudi.org/ " வெப்சைட்டில்  சமீப காலமாக "ஹாட் டாபிக்" ஆக உள்ளது..எதைப்பற்றி???


நிர்வாகத்தில் உள்ளவர்கள் கல்வி தகுதியும், கண்னியமும் உள்ளவர்களாக இருக்க வேண்டுமென்றும், மேலும் நிலம் தானம் செய்தவர்களை கவுரவபடுத்த வேன்டும் என்றும் தான்.........

மிக நல்ல,ஆரோக்கியமான‌ ஆதங்கம் தான்.. பாராட்ட வேன்டும்.. ஆனால்

அன்றே, (03/07/83ல் கல்லூரி நிர்வாக குழு தேர்தல்) ஒருவர், இக்கல்லூரிக்காக ஒரு தகுதியான, திறமை வாய்ந்த, ஒரு டீமை ஒருங்கினைத்து தேர்தல் களத்தில் நிறுத்தினார்களே!!!


முடிவு: தோல்வியோ தோல்வி...............

ஏன் இப்பொழுது கேட்பவர்களைப்போல், அப்பொழுது யாரும் இல்லையா?
அல்லது இவர்களே கூட‌ கேட்கவில்லையே ஏன்? கட்டுண்டார்களா? அல்லது பொது நலமா? சுய நலமா?

இந்த நோட்டீஸை படித்து பாருங்கள். தேர்தல் வாக்குறுதிகளயும், எப்படிப்பட்ட திறமையானவர்கள் என்பதும் , இன்று நீங்கள் கேட்பதை 25 வருடங்களுக்கு முன்பே செயல் படுத்தி, தோற்றும் விட்டார்கள்..


யார் குற்றம்??? உங்களுடைய முடிவுக்கே!!!

தெளிவாக பெரிதாக படிக்க‌ படத்தின் மேல் கிளிக் செய்யவும்.
நிர்வாகம்.

No comments: